மலைமாமுலை யமுதாலுயி ரடைவேகிடு வகையாள்
மலைமாடின மிமயோர்துதி கயலார்விழி மடவாள்
கலைமான்மழு கரமாள்பவர் குறைதீர்த்தரு டுணையாள்
உலகேழினி னொருதாயவ ளுமையாளடி சரணே
மலை மா முலை அமுதால் உயிர் அடைவு ஏகிடு வகையாள்
மலை மாள் தினம் இமயோர் துதி கயல் ஆர் விழி மடவாள்
கலை மான் மழு கரம் ஆள்பவர் குறை தீர்த்து அருள் துணையாள்
உலகு ஏழினின் ஒரு தாயவள் உமையாள் அடி சரணே
பெரிய மலையைப் போன்ற முலைகளால் சுரக்கும் (அவை பர மற்றும் அபர வித்தைகளின் ஊற்றுக் கண் என்பது கருத்து) அமுதூட்டி உயர்களை வீடு பேறு அடையச் செய்யும் வகை செய்பவள், மலையரசன் மகள் என இமயோர் தினமும் ஏத்தும் அழகிய மீனைப் போன்ற கண்களை உடைய மடவாள், கரத்தில் கலைமானையும் மழுவையும் ஏந்தியுள்ள சிவபெருமானின் குறையையும் தீர்த்து அருள்பவள் அவருடைய துணையானவள், ஏழேழ் உலகங்களுக்கும் ஒப்பற்ற தாயானவள் உமையாள் தன் அடிகளே சரண் எமக்கு
She who has two big breasts akin to a mountain which are a fountain, which gives the elixir, for the jeevas to get para and apara vidya and thereby reach salvation. She whom the celestials hail as the daughter of the mountain (Shailaputri) who has beautiful eyes like a fish (Meenakshi). She who even removes the problems of Lord Shiva who holds deer and axe in his hands and is also his wife, that Goddess who is the peerless mother of all universes, who goes by the name of Uma, her feet is our salvation.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக