ஞாயிறு, 23 நவம்பர், 2025

அவனே தமிழானான் வெண்பா


அவனே தமிழானா னாதியந்த மில்லா

தவனே யடையாறு மானா -னவனே 

யவைத்தலையாய்ப் பாடி யகப்பொரு டந்தான்

சிவை(த்)தலையை யெண்ணிச் சிவந்து 




சீர் பிரித்து


அவனே தமிழ் ஆனான் ஆதி அந்தம் இல்லாதவனே அடை ஆறும் ஆனான் அவனே அவைத் தலையாய்ப் பாடி அகப்பொருள் தந்தான் சிவைத்தலையை எண்ணிச் சிவந்து 



பொருள்-


ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனே தமிழானான் , அவனே அதை அடையும் வழியுமானான், அவனே சங்கத்தில் தலைவனாய் இருந்து அகப்பொருள் பாடும் முறைமையையும் உரைத்தான், தன் நாயகியான அன்னை சக்தியின் தலைக் (கூந்தலை) எண்ணி அதற்கு இயற்கை மணம் உள்ள்தென்று, நாணத்தால் சிவந்து!


இறைத்தமிழே இறையுருவாக இருப்பதால் அதுவே அடையப்படும் இலக்காகவும் அதனை அடையும் வழியாகவும் அமைகிறது! அவனருளாளே அவன்றாள் வணங்கி என்பதற்கேற்ப இறையே அடைவு இறையே ஆறு இறையே அருள் யாவும் என்பதாம்


சிவைத் தலை என்பது ஓசைக்காக செய்யுள் வேறுபாடு எனக் கொள்க . கொங்கு தேர் வாழ்க்கை எனத் தொடங்கும் இறையனார் இயற்றிய குறுந்தொகைப் பாடலின் கருத்து - பெண்களின் கூந்தலுக்குத் தாமாவகவே மணம் உண்டு என்பது 


The one (God) without the begining and end himself took the form of Tamizh language, he also became the way of attaining it! He presided over the chair of poets and composed a poem on the genre of inner (Love Songs) bashfully thinking of his wife's (Goddess Shakti's) hair which would have fragrance inherent in itself! 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி