ஞாயிறு, 23 நவம்பர், 2025

வேடன் எய்த சந்த விருத்தம்


வேட னெய்த வம்பி னுக்கி ரைய தான வேடவுன் சீட னெய்த வம்பி னுக்கி றைய தான போதமீ ணாட ணைந்தொ ரைவ ருய்ய நீதி கேட்ட தூதநீ சேட னெய்துன் சேவை செய்யு மாய வாய சேடியே

சீர் பிரித்து வேடன் எய்த அம்பினுக்கு இரை அது ஆன வேட! வுன் சீடன் எய்த அம்பினுக்கு இறை அது ஆன போத! மீள் நாடு அணைந்து ஒரு ஐவர் உய்ய நீதி கேட்ட தூத! நீ சேடன் எய்து உன் சேவை செய்யும் மாய ஆய சேடியே !

பொருள் - வேடன் எய்த அம்பிற்கு இரை ஆனது போல் வேடமிட்டவனே , உனது சீடனான பார்த்தன் எய்த அம்பிற்கு அவனை வழி நடத்து தலைவனாக நின்ற போதனே பாண்டவர்கள் தாங்கள் தோற்ற நாட்டை மீண்டு அடைய நீதி கேட்கச் சென்ற தூதனே நீ உண்மையில் சேஷர்களை இயக்கி உனது அம்புகளாக எய்து உனது சேவையைச் செய்விக்கும் மாய ஆயனான கண்ணனே ! நீயே யாவர்க்கும் இயமானன் - சேஷி

You acted as if you fell a prey to hunter's arrow, You were the Lord and Guru behind your student Arjuna's arrow in the battlefield, in order for the Pandavas to get back their share of land, you undertook the lowly job of a messenger, all this is only seemingly true, you are in fact the archer who uses every Jiva as the arrow to do your biddings oh Maya! Cowherd and you are the supreme Lord of everything!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி