திங்கள், 24 நவம்பர், 2025

வளை உகிர்த்த விருத்தம்

வளையு கிர்த்த குடல்க ளைந்து மாலை சூடு சிங்கமா 

வளையு கந்த வாய்ச்சி மாரி னாழ்ந்த காதல் சிங்கமா

தளைய கற்று தாள்ப தித்து மாது மீட்ட சிங்கமா

தெளிவ கத்தி னன்ப ருள்ள மொளிப ரப்பு மங்கியே 



வளை உகிர்த்த குடல் களைந்து மாலை சூடு சிங்கமா 

அளை உகந்த ஆய்ச்சிமாரின் ஆழ்ந்த காதல் சிங்கமா 

தளை அகற்று தாள் பதித்து மாது மீட்ட சிங்கமா 

தெளிவு அகத்தின் அன்பர் உள்ளம் ஒளி பரப்பும் அங்கியே !


தெளிவான அகத்தை உடைய உனது அன்பர்களின்(அடியர்களின்) உள்ளத்தில் ஒளி பரப்பும் அக்கினியாக உள்ளவனே, நீ எந்த ரூபத்தில் அவர்களுக்குக் தென்படுவாய் ? வளைந்த நகத்தால் இரணியன் குடலைக் களைந்து மாலையாகச் சூடிய நரசிம்மன் வடிவிலா? தயிர் உகந்த ஆய்ச்சியர்களின் ஆழ்ந்த காதலான கண்ணன் என்னும் சிம்மமாகவா அல்லது தன் சாபத்திலிருந்து அனுசூயை அன்னையை விடிவிக்கத் தாள் பதித்த இராம பிரான் என்னும் சிம்ம வடிவிலா?


Oh Lord you stay as the inner fire and shed light in the hearts of your devotees who have a very clear mind, do you appear to them as the Lion Narasimha who tore out intestines of Hiranya Kashipu and wore it as a garland, or as the lion who is object of deep love of the curd loving cow herd women, or as the lion Lord Rama who saved Anusuya from the curse of Gautama Muni?











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி