ஞாயிறு, 23 நவம்பர், 2025

ஆனைக்கும் அடி சறுக்கும் வெண்பா

அடிசறுக்கும் என்றஞ்சி ஆற்றினா டோமோ

மிடிவருத்தும் என்றஞ்சக் கிட்டா - படைவளர்த்த
சேனைக்கும் வெற்றி திசையெட்டின் பார்சுமக்கும்
ஆனைக்கும் அஃதே ஒழுங்கு


அடி சறுக்கும் என்று அஞ்சி ஆற்றின் நீராடோமோ?
மிடி வருத்தும் என்று அஞ்ச கிட்டா படை வளர்த்த
சேனைக்கும் வெற்றி, திசை எட்டின் பார் சுமக்கும்
ஆனைக்கும் அஃதே ஒழுங்கு


ஆற்றின் படித்துறைக்குச் சென்றால் அடி சறுக்கி விடும் என்று அஞ்சி நீராடாம் இருப்போமா என்ன? அதே போன்று ஒரே பெரிய படையை வைத்து நடத்தும் அரசன் வெற்றி வேண்டுமென்றால் தனது படையை எப்படி நடத்துவது உணவளிப்பது என்று வறுமைக்கு அஞ்சி முயற்சி எடுக்காமல் இருக்க முடியுமா? அதே போன்று அஷ்ட திக்கஜங்களும் தனது முயற்சியைத் தவற விட்டால் யார் இந்தப் புவியைச் சுமப்பது என்றவாறு



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி