செவ்வாய், 11 நவம்பர், 2025

பெரு வெளி முதல் விருத்தம்(செவ்வாயிற் செவ்வேள்)

 பெருவெளிமுத லிருநிலம்வரை விரவியபுக ழொருவன்

சுரருலகுறப் பொருதவுணரி னுருசிதையயில் விரகன்
குருவடிவினிற் பிரணவமதை யரன்செவியுரை முருகன்
திருவளருர கருமுகிலரி மருகனதடி சரணே


பெரு வெளி முதல் இரு நிலம் வரை விரவிய புகழ் ஒருவன்
சுரர் உலகு உற பொருது அவுணரின் உரு சிதை அயில் விரகன்
குரு வடிவினில் பிரணவம் அதை அரன் செவி உரை முருகன்
திரு வளர் உர கரு முகில் அரி மருகனது அடி சரணே !


பெரு வெளியான முதல் பூதம் தொடங்கிப் பெருமைக்குரிய நிலமான ஐந்தாம் பூதம் வரையிலும் விரவிய புகழ் கொண்ட (விணணவரும் மண்ணவரும் போற்றிப் புகழும் எனவும் கொள்ளலாம்) ஒப்பற்றவனான, தேவர்கள் தாம் இழந்த உலகை மீட்கும் பொருத்து அவுணர்களைப் போரிட்டு வென்று அவர்கள் உருவைச் சிதைத்த அயிலாகிய வேலைத் தாங்கிய விரகனான, குரு வடிவம் கொண்டு பிரணவப் பொருளை அரனுக்கும் செவி குளிர உரைத்தவனான, திருமகள் என்றும் நீங்கா மார்பனான கரு முகிலைப் போன்ற அரியின் மருகனான முருகனது அடி எமக்கு என்றும் சரணே !

He whose fame is spread across all 5 elements starting from ether and ending with earth (or the one who is praised by both the celestials and earthlings!),who is incomparable, who helped the celestials win back their lost worlds by waging a war and winning and decimating the asuras with his famed lance(vEl), who took the form of a guru and even taught the meaning of Pranava to none other than Hara and whispered it in his ears, who is the nephew of the cloud coloured, black hued Mahavishnu who always has Mahalakshmi in his heart that Lord Murugan's feet is always our refuge!






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி