வெள்ளி, 14 நவம்பர், 2025

வேலேந்தி விருத்தம்

 வேலேந்தி வினைதீர்க்கும் வீராதி வீரா

சூலேந்து சிவனார்க்கு மார்சாமி நாதா
மாலேந்து மனிதர்க்கும் வாழ்வீயும் பாலா
காலேந்து முடனீக்கு முன்னேவந் தாளே


வேல் ஏந்தி வினை தீர்க்கும் வீராதி வீரா சூல் ஏந்து சிவனார்க்கும் ஆர் சாமி நாதா மால் ஏந்து மனிதர்க்கும் வாழ்வு ஈயும் பாலா கால் ஏந்தும் உடல் நீக்கும் முன்னே வந்து ஆளே !



வேல் ஏந்தி வினையைத் தீக்கும் வீரர்கள் யாவர்க்கும் வீரன் நீ
திரிசூலம் ஏந்திய சிவனார்க்கும் அழகிய பிள்ளை ஆசானான சுவாமி நாதன் நீ
மயக்கமுற்ற மனிதர்களுக்கும் உனது அதீத கருணையால் வாழ்வளிப்பன் நீ, கால்கள் தாங்கிக் கொண்டுள்ள (அல்லது மூச்சுக் காற்று ஆதாரமாக உள்ள) இத்தேகம் சாயும் முன்னே வந்து எம்மை ஆள்வாயாக!

Oh Lord who wields the vEl and destroys the Karmas and evils and one who is the bravest of the brave, Oh handsome teacher to even Lord Shiva who wields Trishul and you go by the name Swami Naatha, out of extreme compassion you even give life to the deluded men, before this body which is supported by legs and breath falls, do come quickly and take control of us.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி