செவ்வாய், 18 நவம்பர், 2025

சஞ்சலங்கள் தீர்த்து வைக்கும் எழுசீர்ச் சந்த விருத்தம்

சஞ்ச லங்க டீர்த்து வைக்கு மஞ்ச லங்கை மழலைமாய்

வெஞ்சி னங்க டீப்பி டித்த கஞ்ச னேவி ராக்கதர்

துஞ்சி வீழ லீலை செய்த வஞ்ச னத்து வண்ணனைத்

தஞ்ச மென்று நண்ணு வார்க்க ணஞ்ச லென்ப தண்டுமோ



சஞ்சலங்கள் தீர்த்து வைக்கும் அம் சலங்கை மழலை மாய்
வெம் சினங்கள் தீ பிடித்த கஞ்சன் ஏவு இராக்கதர்
துஞ்சி வீழ லீலை செய்த அஞ்சனத்து வண்ணனை
தஞ்சம் என்று நண்ணுவார்க்கண் அஞ்சல் என்பது அண்டுமோ !


அன்பர்களின் சஞ்சலங்களைத் தீர்க்க வல்ல அழகிய சலங்கையைப் புனையும் குழந்தையைக், கடும் சினம் தீப்போன்று எரிகின்ற கஞ்சனின் ஏவலில் மாய்க்க வந்த இராக்கதர்கள், மாயும் படியாக லீலை செய்த கருநிற வண்ணம் கொண்ட அக்குழந்தையைச் சரணம் என்று பற்றுவார்க்கு அஞ்சல் (பயம்) என்பது உண்டோ ? (இல்லை என்பதாம்)

The kid who wears anklets that are good enough to shatter the distress of devotees, in order to kill him Kamsa sent rakshasas to harm him, but the kid with a black hue as a play easily killed all those rakshasas, for those who surrender to this kid (Lord Krishna) is there any reason to fear? (No!)

Uploading: 4694898 of 4694898 bytes uploaded.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி