திருவோ டிருக்குந் திருமா லடியேந்
திருவோ டெடுக்குஞ் சிவனா ரடியேந்
திருவோ டிருந்து திளைத்தலு மொப்பாந்
திருவோ டெடுப்பத னோடு
திருவோடு இருக்கும் திருமால் அடியேம், திருவோடு எடுக்கும் சிவனார் அடியேம், திருவோடு இருந்து திளைத்தலும் மொப்பாம் திருவோடு எடுப்பதனோடு
யாம் திருவோடிருக்கும் திருமாலுக்கும் அடியோம் அதே வேளையில் திருவோடேந்தும் சிவனுக்கும் அடியோம் ஆதலால் வாழ்வில் திருவோடு திளைத்திடும் நிலையோ அல்லது திருவோடேந்தும் நிலையோ எது வந்தாலும் ஒப்பு நோக்குவோம்
We are devotees of Narayana who is with Lakshmi at the same time we are also the devotees of Shiva who holds a begging bowl, so in life whether it gives us wealth aplenty or takes away everything and gives us only a begging bowl, we view it with equanimity.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக