செவ்வாய், 25 நவம்பர், 2025

அறம்வளர்த்த வெண்பா

அறம்வளர்த்த நாயகி யாழ்விருப்பக் கண்ணி

மறம்வளர்த்த மாவரசி மாதா - புறம்வளர்த்த 

பொய்யைந்தின் றாக்கத்தாற் பொல்லே னுனைமறந்து

மெய்யைந்தின் மேன்மை விளம்பு 



அறம் வளர்த்த நாயகி ஆழ் விருப்புக் கண்ணி

மறம் வளர்த்த மா அரசி மாதா - புறம் வளர்த்த 

பொய் ஐந்தின் தாக்கத்தால் பொல்லேன் உனை மறந்தும்

மெய் ஐந்தின் மேன்மை விளம்பு


அறம் வளர்த்த நாயகியான காமாக்‌ஷியே மறம் வளர்த்த மாராஞ்ஞியே ஸ்ரீ மாதா,  புறத்தே செல்கின்ற பொய்க்கு ஆட்படும் ஐம்புலன்களின் தாக்கத்தால் இப்பொல்லேன் உன்னை மறந்தாலும் அன்னையின் கருணை கொண்ட நீ மெய்யாகிய ஐந்தின் (பஞ்சாக்‌ஷரம் என்று கொள்ளலாம்) மேன்மையை எனக்கு எடுத்துரைக்க வேண்டும் அம்மா 


Oh Goddess Kamakshi who grows Dharma, and Maha Ragni the great empress who grows valour, oh divine mother Sri Matha, even though I falter by the sway of five senses which are enamoured by the outside and fallacy, you as a mother should guide me in explaining the greatness of Panchakshari!







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி