செவ்வாய், 18 நவம்பர், 2025

என்னுள் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 என்னு ளுறைவானை யெங்கெங்குத் தேடியு

மன்னு மகத்துவனைக் கண்டிலனே - கன்னலே
செந்தமி ழண்ணலே செவ்வேட் பரம்பொருளே
வந்தணைத்துக் காட்டு வழி

என் உள் உறைவானை எங்கு எங்கு தேடியும்
மன்னும் மகத்துவனைக் கண்டு இலேன் - கன்னலே !
செந்தமிழ் அண்ணலே செவ்வேள் பரம் பொருளே
வந்து அணைத்துக் காட்டு வழி !




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி