புதன், 19 நவம்பர், 2025

உமையாளடி சரணே விருத்தம்

மகிடாசுரன் றலைவாங்கிடு திரிசூலங்கை யுடையாள்

சகடாசுரன் றலைவாங்கிடு சிறுபிள்ளையி னிளையாள் 

புகழாரரன் றலைசூடிடு மரவாழியை யுடையாள் 

துகளாகிடு நிலைமாற்றிடு முமையாளடி சரணே 


தனதானன தனதானன தனதானன தனனா  


சீர் பிரித்து:- 

மஹிஷாசுரன் தலை வாங்கிடு திரிசூலம் கை உடையாள் 

சகடாசுரன் தலை வாங்கிடு சிறு பிள்ளையின் இளையாள் 

புகழ் ஆர் அரன் தலை சூடிடு அரவு ஆழியை உடையாள்

துகள் ஆகிடும் நிலை மாற்றிடும் உமையாள் அடி சரணே 


பொருள்:-

மஹிஷாசுரன்றன் தலையை வாங்கிய திரிசூலத்தைக் கையில் கொண்டவள் 

சகடாசுரனை உதைத்துச் சாய்த்த சிறுபிள்ளையாகிய கண்ணனின் இளைய சகோதரியானவள் 

புகழும் அழகும் மிகப் பெற்ற சிவனாரின் தலையில் சூடிய பாம்பை தனது கை விரல் மோதிரமாகக் கொண்டவள் 

இவ்வுயர்களெல்லாம் துகளாகி மாயும் என்ற நிலையை மாற்றி அடைக்கலம் கொடுக்கக் கூடிய ஜகன்மாதாவான உமையாளை யாம் சரணடைகிறோம்  


She who holds the Trishul which takes the head of Mahishasuran in her hands, she who is the younger sister of Krishna who killed Sagadaasura, she who wears the snake which highly famed and handsome Lord Shiva wears in his matted locks as her signet ring, and she who saves all Jeevas from remaining as mere dust particles but instead gives them salvation at her feet, to that Goddess Uma's feet we surrender.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி