முத்திதரு மெட்டெழுத்தை முற்று முணர்ந்தோது
பத்திநிலை வாய்க்கப் பலபிறவி யர்த்தமிலா
வத்திகிரி பேரரு ளாளன் மனமுவக்கச்
சித்திக்குங் சீக்கிரஞ் சீர்த்து
சீர் பிரித்து -
முத்தி தரும் எட்டு எழுத்தை முற்றும் உணர்ந்து ஓது
பத்தி நிலை வாய்க்கப் பல பிறவி அர்த்தம் இ(ல்)லா
அத்தி கிரி பேர் அருளாளன் மனம் உவக்கச்
சித்திக்கும் சீக்கிரம் சீர்த்து
முத்தி தரும் எட்டெழுத்தான திருமந்திரத்தை முற்றும் உணர்ந்து ஓதும் பத்தி நிலை வாய்க்கப் பெறுவது எளிதன்று, அதற்குப் பல பிறவி எடுக்கும் அதுவும் அர்த்தமில்லாது செல்லும், தன் முயற்சியால் அது சாத்தியமாக வாய்ப்பே இல்லை தான்! அவ்வாறிருக்க அத்திகிரியான கச்சியில் வாழும் பேரருளாளனான வரதராஜன் மனமுவந்து ஜீவர்கள் அந்நிலை அடைய வேண்டும் என்று எண்ணினால் அது சீக்கிரம் சீர்த்துச் சித்திக்கும்! அவனுடைய மஹா கருணையாலே தான் அவனை அடைய இயலும் சுய முயற்சியால் அல்ல என்ற பிரபத்திக் கருத்து இங்கு உணர்த்தப் படுகிறது
In order to get the devotion and grace to understand and chant the eight syllables that grant salvation one has to spend several lives aimlessly and even then one is never sure to reach it, for what can be achieved by self effort?If however the Lord of Hasthigiri who isa n embodiment of overflowing compassion and grace decides in his mind that a particular Jiva should progress, then one attains the state of supreme wealth soon!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக