யோகநிட்டை யாசனம் மாலனன்ன நாற்கரம்
சோகமற் றன்பர்வாழத் தோத்திரஞ்செய் செபவடம்
மேகமொத்த வண்ணனன்ன சங்கினோடு சக்கரம்
ஆகமேந்து ஞானமூர்த்தி கடிகை யாஞ்சநேயனே
யோக நிட்டை ஆசனம் மாலன் அன்ன நால் கரம்
சோகம் அற்று அன்பர் வாழ தோத்திரம் செய் செப வடம்
மேகம் ஒத்த வண்ணன் அன்ன சங்கினோடு சக்கரம்
ஆகம் ஏந்து ஞான மூர்த்தி கடிகை ஆஞ்சநேயனே !
யோக நிஷ்டையில் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்ற, திருமாலைப் போல நாலு திருக்கரங்களைக் கொண்டு, தனது அடியார்கள் சோகம் இல்லாது வாழத் தோத்திரம் செய்யும் (மனத்தில் இராம நாமத்தை) ஜெப மாலையை வைத்துள்ள, மேக வண்ணனான திருமாலைப் போன்று சங்கும் சக்கரமும் தனது உடலில் (திருக்கரங்களில்) தரித்துள்ள ஞான மூர்த்தி திருக்கடிகை ஆஞ்சநேயனே!
He sits in Yogic posture, he has four hands like his Lord Narayana, to remove his devotees unhappiness he constantly chants the Rama Nama mantra and he has a Rosary for this, he holds the discus and conch like MegaShyama, he is the embodiment of wisdom and he is Hanuman of Ghatikachala!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக