த்யானமுற்ற வன்பர்காண வுடனுகந்து தோன்றிடும்
பானகத்தை மிகவிரும்பும் ஞானமுத்தி சாதனம்
தேனுகக்கும் வண்டுநாதந் தேர்ந்தொலிக்குஞ் சோலைசூழ்
வானுகக்குங் கடிகையாளும் யோகமூர்த்தி சீயமே
த்யானம் உற்ற அன்பர் காண உடன் உகந்து தோன்றிடும்
பானகத்தை மிக விரும்பும் ஞான மூர்த்தி சாதனம்
தேன் உகக்கும் வண்டு நாதம் தேர்ந்து ஒலிக்கும் சோலை சூழ்
வான் உகக்கும் கடிகை ஆளும் யோக மூர்த்தி சீயமே !
தியானம் செய்யும் அடியவர்களுக்கு (குறிப்பாக இத்தலத்தில்) உடனே உகந்து தோன்றிடும் , பானகத்தை மிக விரும்பும் ஞான முத்திக்கு சாதனமான, தேன் உகக்கும் வண்டு நாதம் சிறந்து ஒலிக்கும் சோலைகள் சூழவும் வானமே உகக்கும் படியாகவும் அமைந்த திருக்கடிகை என்னும் இத் திருத்தலத்தில் அதிபதியாக ஆளும் யோக மூர்த்தியான சீயம் நரசிம்மரே !
(திருக்கடிகை- சோளிங்கூர் )
Those who meditate in this holy place of Ghatikachala, immediately are granted by his Darshan because of his extreme compassion! He loves the sweet drink called Panagam and grants Jnana and Mukti, he is the Lord of the Ghatikachala which is surrounded by beautiful groves which are filled with the music of honeybees and he is Yoga Narasimha!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக