ஞாயிறு, 9 நவம்பர், 2025

ஈரோ வில்லன் வெண்பா

 ஈரோசைச் செம்மொழிக ளீன்ற துடியிசைப்ப

நீரோசை தங்குசடை நெஞ்சுருக்கப் - பாரோசை

தானடங்கக் காலோச்சு தாண்டவங் காண்பித்தி

யானொடுங்க வீமலைவில் லன்



நடராஜக் கோலங் காட்டும் படி ஈசனிடம் வேண்டுதல் :-
ஈர் ஓசை செம்மொழிகள் ஈன்ற துடி இசைப்ப
நீர் ஓசை தங்கு சடை நெஞ்சு உருக்க பார் ஓசை தான் அடங்க கால் ஓச்சு தாண்டவம் காண்பித்து
யான் ஒடுங்க ஈ மலை வில்லன்

பொருள் :-
இரண்டு தனித்துவம் வாய்ந்த ஓசைகள் கொண்ட செம்மொழிகளான வடமொழியும் தென்மொழியும் ஈன்ற உடுக்கை இசைக்க
கங்கை நதியின் ஓசை தங்கும் சடையானது எமது நெஞ்சை உருக்கப் பாரின் ஓசையும் அடங்கும் படி காலுயர்த்தித் தாண்டவம் புரி நடராஜ கோலத்தைக் காண்பித்து யான் என்னும் தன்மையை ஒடுக்கும் அருள் புரிபவர் மேரு மலையை வில்லாகக் கொண்ட ஈசனாம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி