ஞாயிறு, 23 நவம்பர், 2025

ஆனைக்கும் அடிசறுக்கும் வெண்பா

ஐரா வதெமென்னும் ஆனைக்கும் ஆணவந்தான்

தொய்வாம் இழிபிறவி தோற்றுவிக்கும் - உய்வாம்

படிசறுக்கும் சீவர்க்குப் பற்றிறையே காணீர் 

அடிசறுக்கும் ஆற்றின்மீ ளற்கு 


சீர் பிரித்து:- 

ஐராவதம் என்னும் ஆனைக்கும் ஆணவம் தான் 
தொய்வாம் இழி பிறவி தோற்றுவிக்கும் உய்வாம்
படி சறுக்கும் சீவர்க்குப் பற்று இறையே காணீர் 
அடி சறுக்கும் ஆற்றின் மீளற்கு 


இந்திரனொடு ஐராவத யானையாக இருந்தாலும் அதற்கு ஆணவம் தலையெடுக்க அது துருவாசர் அளித்த மாலையை மிதித்து அதன் பொலிவிழந்து புவியில் இழிந்து பிறவி எடுக்கும் அவலம் ஏற்பட்டது, இப்புவியில் வந்து சறுக்கும் ஜீவர்களுக்கோ, அடி சறுக்கும் கடினமாக ஆறாக இருக்கும் இவ்வாழ்வினின்று உய்வளிப்பது அவர்கள் பற்றாகக் கொள்ளும்  இறையே , இதை நன்கு காணீர் !






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி