புதன், 31 டிசம்பர், 2025

உலகில் கட்டளைக் கலித்துறை (செவ்வாயிற் செவ்வேள்)

 உலகிற் பெருகிய தீமை யொழிய அவுணர்குலம் 

பலகால் தழைத்துச் சுரரைப் படுத்து நிலைதிரும்ப 

அலகி லனல னுதற்கண் பொறியா யவதரித்த

விலகா வினையின் விடிவாய் விளங்கும் முருகுருவே


 உலகிற் பெருகிய தீமை யொழிய அவுணர்குலம் 

பலகால் தழைத்துச் சுரரைப் படுத்து நிலையொழிய 

அலகில் அனலான் நுதற்கண் பொறியா யவதரித்த

விலகா வினையின் விடிவாய் விளங்கும் முருகுருவே


உலகில் பெருகிய தீமை ஒழியவும், அவுணர் குலம் பலகாலம் தழைத்துக் கொடுங்கோன்மை ஆட்சி புரிந்து சுரரைப் படுத்தும் படியாக நிலவிய நிலை ஒழியவும், எல்லையில்லாத சுடராகத் தோன்றிய அண்ணாமலையாரின் நெற்றிக் கண்ணில் பொறியாக அவதரித்தவனுமான , அனைத்துயிரும் வினைகள் நீங்காது பாடு படும் நிலையையும் ஒழிக்க வந்த அதற்கு ஒரு விடிவாய் விளங்குபவனுமான அழகே உருவெடுத்தன் அல்லவோ நீ முருகா!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி