புதன், 17 டிசம்பர், 2025

மார்கழி 2

வேண்டா வினைவகை வீணென தேறிபின்

சீண்டா வகையவை தீயா லெரிமூட்டு

பாண்டவர் போர்வெல்ல பார்ப்பார நீங்கிட
வாண்டவன் மாந்தனா யன்றுவந்து தேர்கடவி
மீண்டுவர மாயையின் மேன்மையுரை போரூடே

மாண்டவர் மாய்ப்பவர் மாயனே யென்றுரைப்பான்
யாண்டுமவ னாறிலக்கா யேற்றமொழி பாவையுரை
யாண்டாளின் பாவை யருந்தேலோ ரெம்பாவாய்

சீர் பிரித்து:-
வேண்டா வினை வகை வீண் என தேறி பின்
சீண்டா வகை அவை தீயால் எரி மூட்டு
பாண்டவர் போர்வெல்ல பார் பாரம் நீங்கிட
ஆண்டவன் மாந்தனாய் அன்று உவந்து தேர் கடவி
மீண்டு வர மாயையின் மேன்மை உரை போர் ஊடே
மாண்டவர் மாய்ப்பவர் மாயனே என்று உரைப்பான்
யாண்டும் அவன் ஆறு இலக்காய் ஏற்ற மொழி பாவை உரை
ஆண்டாளின் பாவை அருந்து ஏலோர் எம்பாவாய்




பொருள் -
வேண்டா வகை வினைகளைச் சீண்டாதபடி எரிமூட்டச் செய்யும், பாண்டவர் வெல்வதற்கும் பூ பாரம் நீங்குவதற்கும் ஆண்டவனான கண்ணனே மானுடப் பிறவி எடுத்து மாயையின் மீள்வதற்குச் சாரதியாய்க் கீதை போர் நடுவே உரைத்து மாய்பவன் மாய்ப்பவன் யாவும் அவனே என்று விசயற்கு உணர்த்தினான், அவனே இலக்காகவும், அவனை அடையே அவனே வழியாகவும் திருப்பாவை உரைத்த ஆண்டாளின் பாவை அருந்திச் சுவைக்க நாம் எழுவோமாக !

To give up bad Karmas, identify them as useless and to cast it aside and burn it away, the God who descended on this earth to make the Pandavas win the war of Mahabharatha and reduce the burden of Bhu Devi, took to the job of being a charioteer and amidst the battle narrated his Geetopadhesha to Arjuna which helps the Jeevas to come out of his Maya and convinced Arjuna as the killer and killed are all himself! That Lord Krishna is the end destination and the path to achieve it too, thus Aandal sung in her thiruppaavai, let us wake up to listen and consume her peerless song!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி