வெள்ளி, 19 டிசம்பர், 2025

மார்கழி-4

 இந்திரனி னாணவத்தை யேற்றிமலை மாய்ப்பானைத்


தந்திரங்கள் செய்தமரிற் சார்வாரைக் காப்பானை 


மந்திரங்கொண் மாமுனிவர் வாஞ்சையகம் வாழ்வானைச்


சுந்தரிக ணாட்டமுறுந் தூயமுனைப் பாலகனை 


யந்தரித மூத்தானை யண்டமெலாங் காப்பானைச் 


சொந்தமெனச் சேர்வாளைத் தொல்புதுவை நாட்டாளைச்


சந்தமுடன் சங்கத் தமிழ்மாலை தந்தாளை 


வந்தனைகள் செய்து வணங்கேலோ ரெம்பாவாய் 


இந்திரனின் ஆணவத்தை ஏற்றி மலை மாய்ப்பானை 

தந்திரங்கள் செய்து அமரில் சார்ந்தாரை காப்பானை 

மந்திரம் கொள் மா முனிவர் வாஞ்சை அகம் வாழ்வானை 

சுந்தரிகள் நாட்டம் உறும் தூ யமுனை பாலகனை 

அந்தரி தம் மூத்தானை அண்டம் எலாம் காப்பானை 

சொந்தம் என சேர்வாளை தொல் புதுவை நாட்டாளை 

சந்தமுடன் சங்கத் தமிழ் மாலை தந்தாளை 

வந்தனைகள் செய்து வணங்கு ஏலோர் எம்பாவாய் 


இந்திரனின் ஆணவத்தைக்  கோவர்தனம் என்னும் மலையை ஏற்றி மாய்ப்பவனைத்  

தந்திரங்கள் பல செய்து போரில் தன்னைச் சார்ந்த பாண்டவரைக் காப்பவனை

மந்திரம் வல்ல மாமுனிவர்கள் தம் அழகிய இதயத்தில் என்றும் வாழ்பவனை 




மிக்க அழகுடைய மங்கையர் நாட்டம் கொள்ளும் யமுனைத் துறைவனை 

அந்திரிக்கு மூத்தவனை அகிலமெல்லாம் காப்பவனைச்

சொந்தம் என்று சேரும் தொல் புதுவை நாட்டவளான, சந்தத்துடன் கூடிய

 சங்கத் தமிழ் மாலையான திருப்பாவை அருளிய ஆண்டாளை சேவித்து

 வணங்க எழுவீர் எம் பாவைகளே!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி