சனி, 27 டிசம்பர், 2025

மார்கழி-7

மாசிலான் மாதவன் மாயவன் றாயவன்

கேசவன் கீதைசொல் கேள்வியி னாயகன்

யாசக னூறுசொ லேசினாற் கூற்றவன் 

கோசகன் கீசக னாசமாங் காரணி

யார்சகன் சூசக னார்சுடர் வீசிடுந்

தேசகன் பாசமே பாசமென் றோதிடு

வீசிடுந் தென்றலாம் வில்லிபுத் தூரின

ளாசுபா வாயவா வாழ்ந்தேலோ ரெம்பாவாய் 


மாசு இ(ல்)லான் மாதவன் மாயவன் தாயவன் 

கேசவன் கீதை சொல் கேள்வியின் நாயகன் 

யாசகன் நூறு சொல் ஏசினால் கூற்றவன் 

கோ சகன் கீசகன் நாசம் ஆம் காரணியார்

சகன் சூசகன் ஆர் சுடர் வீசிடும் 

தேசகன் பாசமே பாசம் என்று ஓதிடு

வீசிடும் தென்றல் ஆம் வில்லிபுத்தூரினள் 

ஆசு பா ஆய வா ஆழ்ந்து ஏலோர் எம்பாவாய் 


மாசற்ற மாதவன், மாயவன் தாயும் ஆனவன், கேசவன், கீதை உரைக்கும் கேள்வியின் நாயகன், வாமனனாக யாசகம் கேட்டவன் நூறு வசவு பாடச் சிசுபாலனுக்குக் கூற்றானவன், அனைத்து ஆநிரைக்கும்(உயிர்க்கும்) நண்பன், கீசகனின் வதத்திற்கு காரணியாக இருந்த திரௌபதிக்கு நெருங்கிய நண்பன், சூசகமாக பல லீலைகள் செய்தவன், அழகிய சுடரான சக்கரத்தாழ்வாரை வீசும், ஒளி மிக்கவனான நாரணனின் பாசமே பாசம் என்று ஓதிடும் வீசும் தென்றலைப் போன்ற இனிமையான வில்லிபுத்துரைச் சேர்ந்த கோதை தந்த ஆசு கவியை ஆழ்ந்து தெளிவோம் வாருங்கள் அடியார்களே






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி