ஞாயிறு, 28 டிசம்பர், 2025

மார்கழி-8

தேவாதி தேவனைச் செய்யவ ணாதனை

மூவா முதல்வனை மூவர்க்கு மூத்தானை

நாவாயி னண்பற்காண் கங்கை கடந்தானை 

யூழ்வினை மாய்த்துயர் வீடருளு மாயனை 

யேவினை யேவி யெழுமரம் பட்டானை

நாவார வேத்தி நலமளித்த நங்கையின்

பாவையைப் பாடாது பாழாம் பொழுதெல்லா

நோவன்றோ நோற்க வெழுவேலோ ரெம்பாவாய்  


தேவாதி தேவனை செய்யவள் நாதனை 

மூவா முதல்வனை மூவர்க்கும் மூத்தானை 

நாவாயின் நண்பன் காண் கங்கை கடந்தானை 

ஊழ் வினை மாய்த்து உயர் வீடு அருளும் மாயனை 

ஏவினை ஏவி எழு மரம் பட்டானை 

நா ஆர ஏத்தி நலம் அளித்த நங்கையின் 

பாவையை பாடாது பாழ் ஆம் பொழுது எல்லாம் 

நோவு அன்றோ நோற்க எழு ஏலோர் எம்பாவாய் 


தேவர்கள் தொடங்கி அனைவருக்கும் தேவனைத், திருமகள் நாதனை மூப்பென்பது இல்லா முதல்வனைம் மும்மூர்த்திகளுக்கும் மூத்தவனை, நண்பனைக் காண (இராமனாக குகனை) நாவாயில் கங்கை நதியைக் கடந்தானை, உயிர்களின் ஊழ் வினையை மாய்த்து உயர் வீடு பேறு அருளும் மாயனை, அம்பு ஏவி ஏழு மராமரத்தை இராமனாக பட்டுப் போகச் செய்தானை, நா ஆர ஏத்தி நலம் உலக உயிர்கட்கெல்லாம் அளித்த நங்கையான ஆண்டாளின் திருப்பாவையைப் பாடாது போம் பாழ் ஆகும் பொழுது எல்லாம் நமக்கு நோவு அன்றோ என்றறிந்து இம் மார்கழி நோன்பை நோற்க நாம் எழுவோமாக ! 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி