புதன், 24 டிசம்பர், 2025

குன்றக் குடியுறைக் கோமானை விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 குன்றக் குடியுறைக் கோமானைக்

குன்றங் குடியமர் தூமானை


வென்றித் திகழுரு வேலானை
வஞ்சிக் கொடியணை மயிலானைப்

பன்றிப் புகழுரு பார்வேந்தற் கென்றும் மகிழ்தரு மிளையானை
ஒன்றிக் கரமுய ருளமேத்தல் ஒன்றே வரமென உணர்வோமே


குன்றக் குடி என்னும் திருத்தலத்தில் உறையும் கோமானைக் குன்றுகள் தோறும் குடியமர்ந்த தூய மஹானை, வெற்றியின் குறியீடாக திகழும் வேலாயுதம் உடையோனை, வஞ்சிக் கொடியான வள்ளியம்மை அணைக்கும் மயில் வாகனனைப், பன்றியாக புகழ்பெரும் அவதாரம் கொண்ட திருமால் என்றும் மகிந்திருக்கும் இளம் பிள்ளையை, கரமுயர அவகைளைச் சேர்த்து உள்ளத்தால் ஏத்துவது ஒன்றே நமக்கான வரமென உணர்வோம் நாம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி