தனந்தரு மின்பந் தரும்பொரு வேலன் றனிக்கருணை
தினந்தருந் திவ்யந் தரும்வினை தீர்த்தருள் சேந்தனினை
மனந்தரு மாண்பு தருமணி யாஞ்சுந் தரத்துடலக்
கனந்தரு முத்தி தருமுரு காவென் கணப்பொழுதே
#கட்டளைக்கலித்துறை
சீர் பிரித்து-
தனம் தரும் இன்பம் தரும் பொரு வேலன் தனிக் கருணை
தினம் தரும் திவ்யம் தரும் வினை தீர்த்து அருள் சேந்தன் நினை
மனம் தரும் மாண்பு தரும் மணியாம் சுந்தரத்து உடலக்
கனம் தரும் முத்தி தரும் முருகா என் கணப் பொழுதே
பொருள்
போரில் வெல்லும் வேலனின் தனிக் கருணையானது முருகா என்று சொல்லும் அக் கணப்பொழுதிலேயே , தனம் தரும் இன்பம் தரும் அதைத் தினமும் தரும், திவ்வியம் தரும் வினையைத் தீர்த்து அருளும் சேந்தனயே நினைத்திருக்கும் மனம் தரும் மாண்பு தரும் மணிபோல் ஜொலிக்கும் அழகான உடலின் கனம் தரும் முத்தியும் தரும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக