மாவாய் பிளந்த மூவா முகுந்தனை
யேவா நகைத்து முப்புர மெரித்தா
னஞ்சடர் மிடற்றமு தாக்கு நங்கை
பஞ்சுக் கரமணை பாங்குசெய் வேலன்
களவிற் குறத்தி கைத்தலம் பற்றக்
களிற்றுரு வெடுத்த வெள்ளெயிற் றொருவ
னளவற்ற வாற்றலைச் செப்ப
வான்றோர் மொழியி னகலமுந் துகளே
மா வாய் பிளந்த மூவா முகுந்தனை
ஏவா நகைத்து முப்புரம் எரித்தான்
நஞ்சு அடர் மிடற்று அமுது ஆக்கு நங்கை
பஞ்சுக் கரம் அணை பாங்கு செய் வேலன்
களவில் குறத்தி கைத்தலம் பற்ற
களிற்று உரு எடுத்த வெள் எயிற்று ஒருவன்
அளவ அற்ற ஆற்றலைச் செப்ப
ஆன்றோர் மொழியின் அகலமும் துகளே
குதிரையாய் வந்த கேசி என்னும் அரக்கனின் வாயைப் பிளந்தவனான கண்ணனை அஸ்திரமாகக் கொண்டும் ஏவாமலே முப்புரம் எரிசெய்த சிவபெருமானின் நஞ்சு அடர்ந்த கண்டத்தை அமுதமாக மாற்றிய நங்கை அன்னை பராசக்தி தனது பஞ்சு போன்ற கரங்களால் அணைத்து ஆறு குழந்தைகளை ஓருருவாய் செய்த அவ்வடிவேலனின் களவு மணம் வள்ளி தேவியுடன் ஈடேற யானையின் உரு கொண்டு வந்த வெள்ளை தந்தம் பொருந்திய ஒப்பற்ற விநாயகனின் அளவற்ற ஆற்றலைச் சொல்வதற்கு ஆன்றோரின் மொழியின் அகலம் கூட ஒரு துகள் போலவே தான் அமைகிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக