அளவி லழகின் மறுபேர் முருகன்
றொளைவேன் மலைமா துகள்செ யொருவன்
வளைவில் லிராமன் வழுத்து மருகன்
விளைப்பான் விதிக்கும் விதி
அளவு இல் அழகின் மறு பேர் முருகன்
தொளை வேல் மலை மா துகள் செய் ஒருவன்
வளை வில் இராமன் வழுத்து மருகன்
விளைப்பான் விதிக்கும் விதி
அளவே இல்லாத அழகின் மறு பெயர் முருகன் என்பது! அவன் தொளை வேலால் மலையாகவும் மாமரமாகவும் இருந்த சூரனைப் பொடியாகச் சாய்த்த தனிச்சிறப்புடையவன், வில்லை வளைத்த இராம பிரான் வழுத்தும் மருகன், விதியாகிய பிரமனுக்கும் விதியை விளைவிப்பவன் அவனேயாம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக