வியாழன், 2 ஏப்ரல், 2026

அடிமையாய் (ஆஞ்சநேயர்) நேரிசை ஆசிரியப்பா

அடிமையாய் நண்பனா யன்பனாய்க் கொடியா

யூர்தியாய்க் குடையாய்த் தூதனா யரியா

சனமா யருமருத் துவனாய்த் தளரா
மனமாள் சேனை முதல்வனாய்ப் புலவனா
யிராம னேற்ற மியம்பப் புவிதங்
குயிரா யொப்பிலி யுயர்வுபல பெற்றும்
பணிவே பணியாய் விளங்கு
மணிபோல் வாழ்ந்தான் மாந்தன் றேவே

புதன், 1 ஏப்ரல், 2026

புல்லாதார் நேரிசை ஆசிரியப்பா

அலையாய்ப் பாயுங் கலையாங் காத  

லிலைமூடு பனிக்கு முலைமூடு மைக்கு

மிகலாய்த் தோன்று பகல

புகழ்வா ருன்னைப் புல்லா தாரே

பல்லாயிரப் பிறப்பு நேரிசை ஆசிரியப்பா

பல்லா யிரப்பிறப் பாண்டும் பார்க்க

ணில்லா ததுபோ லீண்டுழல் குழவி

சிறைவாழ் வென்றே யறியா தந்தோ

நிறைவாய் நீயு முறங்கத் தகுமோ

வீரே ழுலகுக் கன்னாய் 

வாராய் மகவை மீட்க வீடே

அடிமையாய் (ஆஞ்சநேயர்) நேரிசை ஆசிரியப்பா

அடிமையாய் நண்பனா யன்பனாய்க் கொடியா யூர்தியாய்க் குடையாய்த் தூதனா யரியா சனமா யருமருத் துவனாய்த் தளரா மனமாள் சேனை முதல்வனாய்ப் புலவனா யிராம...