கண்டவர் காணத் துடிப்பவர் கந்தன்
காதலிற் கசிந்தவ ரவர்தந்
தொண்டவர் செல்வம் விழைபவ ரிடராற்
சோர்ந்தவர் செந்தமிழ் நாட்டங்
கொண்டவர் வாழ்வி னழகிய னாடுங்
கொற்றவர் மற்றவ ரேத்தும்
விண்டரும் வேலன் புகழ்சொலே நாளும்
விள்பவர்க் கிணையெது சொல்லே
கண்டவர் காணத் துடிப்பவர் கந்தன்
காதலிற் கசிந்தவ ரவர்தந்
தொண்டவர் செல்வம் விழைபவ ரிடராற்
சோர்ந்தவர் செந்தமிழ் நாட்டங்
கொண்டவர் வாழ்வி னழகிய னாடுங்
கொற்றவர் மற்றவ ரேத்தும்
விண்டரும் வேலன் புகழ்சொலே நாளும்
விள்பவர்க் கிணையெது சொல்லே
ஞானம் வழங்கு நல்லாசான்
நாதன் வணங்கு மேரகத்தான்அங்கிசேர் பொறியா முக்கண்
அங்கிசேர் சான விக்கண்
தங்குசீர் கிரண மாறுஞ்
சண்முகத் தேவாய்த் தோன்று
மங்குதீர் நிச்ச லன்றன்
வைபவ மேத்தும் பூசை
கொங்குதேர் வேட மங்கை
கோதமி புகழென் றாமே
ஏழ்கடன் மணலை யெண்ணு
மேதமாங் கட்சித் தேர்வு
பாழ்கடன் மூழ்கும் வாழ்வுஎன்னை வழிநடத்த வென்னை யுடனிருக்க
வென்ன விடையூ றெழநினைக்கு - முன்னைசூதிற் றோற்றநல் லைவரின்
சோர்வ கற்றிய வார்சகன்
தூதிற் சென்றனன் மீள்கொளத்
தோற்ற விடங்களை யாயினும்
வாதிற் றீயவர் மாய்வுற
வாக்க ளித்தனன் சகிக்கவன்
யாது மறிந்தவன் சித்தமே
யடியர்க் கேற்றமென் றென்றுமே
கருவைக் கொல்லுங் கணையி னின்று
காக்குங் கதிர்மறைத்துப்
பொருவில் சொல்லைப் பொய்யா திருக்கப்
போற்று மாழியனை
உருவி லருவி லுணர்வா லுடலா
லுணரு மடியர்தமை
இரவும் பகலு மிமையா தேத்து
மிசைவைக் கொண்மனனே
அமரரின் றுயரற வழிசெயு
மருமறை யனுதினந் துதிசெயும்
இமயமுங் குமரியுந் தனதெனு
மிணையிலி திருவிடந் துதிசெயும்
உமையொரு பங்கனும் விழிகொள
வுலகினில் வரவழை குழந்தையின்
சுமையறு கதிதரு திருவடி
தொழுவரைத் துதிசெய விழைவமே
கடலாழ மீட்டுமைந்தன் கல்விதந்த வாசாற்குக்
கடன டைத்தாய்
விடையேழைச் சென்றடக்கி விருப்பத்தின் மணமகளை
வென்று வந்தாய்
தொடைதாக்க வீமற்குச் சொல்லுரைத்துச் சுயோதனற்குத்
தோல்வி தந்தாய்
படிமீதுன் புகழாரம் பறைசாற்றுஞ் செந்தமிழ்க்கே
பணிவீ தேவே
வெண்ணெய் திருடுஞ் சிறுபிளையா
வேள்விப் பயனாம் பரம்பொருளா
பெண்ணை மயக்கும் பாலகனா
பேய்முலை யுண்ட கோமகனா
மண்ணை விழுங்கு மாதவனா
மாபோர் வென்ற சாரதியா
கண்ணின் மணியா நிற்பவனே
கண்ணா யாவு மானவனே
கார்முகில் வண்ணன் மீது
காதலில் வீழ்ந்த பெண்கள்
நீர்முக மாடி நிற்க
நேர்த்தியாய்க் கவர்ந்தா னாடை
சீர்தரு மொப்ப டைப்பைத்
தேர்முகங் கொண்டா னேனோ
ஓர்புக னீயென் பார்க்கே
யுடையுளஞ் சேர்த்தீ தற்கே
சித்திரை பிறந்து புத்தாண் டொளிரச்
குகனையே தொழுது குதூகல மெய்தி
மகவுசேர் செல்வமு மாண்பும் பெற்றுப்
புகழிகழ் யாவுமே ஒன்றாய்க் காணுந்
தகைமைசெய் தவநெறிச் சால நிற்க
ஆண்டது புதிதெனப் பிறந்தா லென்ன
யாண்டுமே உன்னையே யாறாய்க் கொள்வோம்
காண்டலும் கேட்டலும் கந்தன் நாம
மாண்டவா வாளவே விரைவில் வாவா
கொடியுடைச் சேவலோன் குகனை நாளும்
படியிலே தொழுதிடும் பழுதில் பாங்க
ரடியினைத் தொழுதிடு மகத்தை யருள்வாய்
விடியவே வாழ்வெலாம் வேலா முருகா
சித்திரை பிறக்கச் சீர்பல தருவான்
சொற்றுணை நின்று சத்தியத் தருள்வான்என்பை யுயிராக்கி யேற்ற வழியளித்
வேலைப் பணிக ணறிதுயி லிருந்தும்
வீறும் பணிகள் விண்ணே ரிருந்தும்
மானைத் துயரை யத்துளி யழித்த
மாலைத் தொழுநற் சோலை நாடர்
மாலே செயினு மாலை தருவார்
மாலை வெம்மை மறையச் செய்வார்
மனந்தள ராதே மான்விழி மாதே
வாகை சூடு வையக் கோனே
தோகை சூடு தூயாள் கேள்வ
வூழி முதல்வ வாழி துயில்வ
வுனக்கு மொருகுறை யுரைப்பேன் கேளா
யடிமை செயலுனக் கறவே யிலையே
நுண்மை தேடி நுண்மை தேடி
யண்மை நிற்கு முண்மை காணீர்
பெண்டிர் நல்கு மின்பமு மின்று
கண்டீர் கண்டீர் கருவியி னூடே
ஈசன் மீது நேசம் வைப்பார்
ஞானத் தடைவி னாட்டங் கொள்வார்
செய்யுந் தொழிலே தெய்வ மென்பா
ருய்யு மாறு மவனே யென்பார்க்
கோச்சி நின்று மொப்பா வாரே
மாந்தர் சொல்லும் பொய்யா வாழ்வு
வேந்தரைப் பணியும் வீழ்வா வாழ்வு
சேந்தனைப் பணியும் சித்தே வாழ்வு
சாந்துணைப் பொழுதுஞ் சலன மற்றே
மானுட முண்டோ மாந்தர்க் கவர்த
மூனுடம் பொன்றே யுயர்வாய்க் கொள்வர்
பசித்தா லன்றிப் பாய்ந்து கொல்லற்
கறிவைந் துடையன பிறவுயிர் நாடா
வாறா மறிவைத் தேறா வறிவாய்த்
தன்னல மொன்றே யெண்ணத் தாஅண்
டின்னல் செய்து மண்ணுயு ரழிக்கு
மாந்தர்க் கையோ மானுடங் குறையே
மயிலாய்த் தாங்க வுயர்பே றில்லை
யயிலா யோங்க வருளீங் கில்லை
சேவற் கொடியாந் திருவு மில்லை
யாயினுந் தாயாய் வேளே
யோய்விலா துனபுக ழொலிக்குஞ்
செந்தமிழ்ச் செல்வஞ் செவிக்கீந் தனையே
கார்சூழ் வானங் கடுங்கோ டைக்கண்
ஆர்த்தெழு மிடியுட னச்சத் தூட்டினு
மழைபெய் தாட்கொளும் வகையாய்
முயக்கம் பயக்கு மூடலு முறையே
நிரப்பப் பல்பொரு ணிரப்பு நீங்குமா
விரப்ப வாழ்வென் றிருந்துமென்
வையமே வீடா வீற்றிருப் பார்க்கே
அடிமையாய் நண்பனா யன்பனாய்க் கொடியா
யூர்தியாய்க் குடையாய்த் தூதனா யரியா
சனமா யருமருத் துவனாய்த் தளராஅலையாய்ப் பாயுங் கலையாங் காத
லிலைமூடு பனிக்கு முலைமூடு மைக்கு
மிகலாய்த் தோன்று பகல
புகழ்வா ருன்னைப் புல்லா தாரே
பல்லா யிரப்பிறப் பாண்டும் பார்க்க
ணில்லா ததுபோ லீண்டுழல் குழவி
சிறைவாழ் வென்றே யறியா தந்தோ
நிறைவாய் நீயு முறங்கத் தகுமோ
வீரே ழுலகுக் கன்னாய்
வாராய் மகவை மீட்க வீடே
உண்மை வடிவா யுலகி னின்றா னூழின் வலியைத் தணிப்பான் கண்மை வண்ணன் காத லாயர் கண்ணன் பகையைக் காய்வா னண்மை விழைவோர்க் கன்பின் வடிவ...