புதன், 1 ஏப்ரல், 2026

புல்லாதார் நேரிசை ஆசிரியப்பா

அலையாய்ப் பாயுங் கலையாங் காத  

லிலைமூடு பனிக்கு முலைமூடு மைக்கு

மிகலாய்த் தோன்று பகல

புகழ்வா ருன்னைப் புல்லா தாரே


(தலைமகள் நெஞ்சோடு சொன்னது)

அலையாய் பாயும் கலை ஆம் காதல் - காதல் என்பது அலைபோன்று பாயும் (மீண்டு மீண்டு எழும்) கலை ஆகும் 


இலை மூடு பனிக்கும் - இலை மூடுகின்ற இரவு படர்ந்த பனிக்கும் 


முலை மூடும் ஐக்கும் - என முலைகளைத் தழுவி உறங்கிக் கொண்டிருக்கும் எனது தலைவனுக்கும் 

இகலாய் தோன்று பகல - பகைவனாய்த் தோன்றுகின்ற பகலவனே/கதிரவனே 


உன்னை புகழ்வார் புல்லாதார் - காமத்து இன்பத்தை அறியாதவர்கள் தான் உன்னைப் புகழ்வர், ஏகாரம் இழிவுச் சிறப்பு 


தலைவி கதிரவன் மீது கடிந்து கொள்ளும் படியான கருத்தைச் சொல்லித் தனது பிரிவின் வலியைத் தன் நெஞ்சோடு உரைக்கிறாள் 


alaiyaayp paayum kalaiyaang gaadhal 

ilaiymoodu panikkum mulaimoodum aikkum 

igalaayth thOnRu pagala 

pugazhvaar unnaip pullaa dhaarE 


The art of love is like a wave that flows time and again. Oh Sun, you are the enemy of both dew drops which cover the leaves in the night and also my Lord who covers my bosom at the same time, those who indeed praise you have no idea about the experience of love! 

The lady in the pretext of being unhappy with the sun expresses her feelings of separation that is bound to happen with her lover in a subtle way. This is self lamentation. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அடிமையாய் (ஆஞ்சநேயர்) நேரிசை ஆசிரியப்பா

அடிமையாய் நண்பனா யன்பனாய்க் கொடியா யூர்தியாய்க் குடையாய்த் தூதனா யரியா சனமா யருமருத் துவனாய்த் தளரா மனமாள் சேனை முதல்வனாய்ப் புலவனா யிராம...