பல்லா யிரப்பிறப் பாண்டும் பார்க்க
ணில்லா ததுபோ லீண்டுழல் குழவி
சிறைவாழ் வென்றே யறியா தந்தோ
நிறைவாய் நீயு முறங்கத் தகுமோ
வீரே ழுலகுக் கன்னாய்
வாராய் மகவை மீட்க வீடே
சிறை வாழ்வு என்றே அறியாது - இப்பிறப்புச் சிறைபோன்றது என்றே அறியாது
அந்தோ - இரக்கக் குறிப்பு
பார் கண் பல் ஆயிரப் பிறப்பு ஆண்டும் இல்லாதது போல் ஈண்டு உழல் குழவி - ஆயிரக்கணக்கான பிறப்புகள் வெவ்வேறு வகை இப்பாரின் கண் எடுத்தும் கூட மாயை தெளியாமல் இங்கே உழன்று கொண்டு இருக்கும் சிறு பிள்ளை
ஈர் ஏழு உலகுக்கு அன்னாய் - 14 உலகங்களையும் ஆளும் யாவற்றிற்கும் அன்னையே
நீயும் நிறைவாய் உறங்க தகுமோ - உனது பிள்ளைகள் இவ்வாறு உன்னை விட்டுச் சென்று வீடு திரும்பாது வெளியே பாதை தவறிக் கிடக்க நீ மட்டும் நிறைவாக ஒரு அன்னையாய் உறங்கவா முடியும்
மகவை வீடு மீட்க வாராய் - உனது மகவை வீட்டுக்கு மீண்டு அழைத்துச் செல்ல வரவேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக