செவ்வாய், 7 ஏப்ரல், 2026

மயிலாய் இணைக்குறள் ஆசிரியப்பா


மயிலாய்த் தாங்க வுயர்பே றில்லை

யயிலா யோங்க வருளீங் கில்லை 

சேவற் கொடியாந் திருவு மில்லை 

யாயினுந் தாயாய் வேளே 

யோய்விலா துனபுக ழொலிக்குஞ்

செந்தமிழ்ச் செல்வஞ் செவிக்கீந் தனையே 


உன்னை மயிலாகத் தாங்கும் அளவு பேறோ, அயிலாக ஓங்கும் அருளோ, சேவற்கொடியாகும் திருவோ எம்மிடம் அறவே இல்லை, என்றாலும் நீ தாயைப் போன்ற கருணை உடையவன் வேளே ஆதலால் ஓய்வு இல்லாது உனது புகழ் ஒலிக்கும் செந்தமிழ்ச் செல்வத்தை எமது செவிக்கு அளித்தனை !






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீர்வேண் மருகனாய் அறு சீர் விருத்தம்(செவ்வாயிற் செவ்வேள்)

  நீர்வேண் மருகனாய் வந்தாளு நீர்வேண் முருகனாஞ் செந்தேனே சூர்வேர் சிதைத்தருள் செய்யற்கே யோர்வேல் கரத்ததா ளெம்மானே சார்வே துனையன்...