திங்கள், 6 ஏப்ரல், 2026

கார்சூழ் வானம் நேரிசை ஆசிரியப்பா

 கார்சூழ் வானங் கடுங்கோ டைக்கண் 

ஆர்த்தெழு மிடியுட னச்சத் தூட்டினு

மழைபெய் தாட்கொளும் வகையாய் 

முயக்கம் பயக்கு மூடலு முறையே


கடும் கோடை கண் - கடுமையான கோடையின் பருவத்தில் 

கார் சூழ் வானம் - கரும் மேகங்கள் சூழ் இருட்டாய்க் காட்சி தரும் வானம் 

ஆர்த்து எழும் இடி உடன் அச்சத்து ஊட்டினும் - முழக்கமிட்டு பெருமோசையுடன் அச்சம் தரும் படி இடியுடன் முதலில் தோன்றினாலும் 

மழை பெய்து ஆட்கொளும் வகையாய் - இறுதியில் மழை பெய்து நிலத்தைக் குளிர்வித்து ஆட்கொள்வதைப் போன்று 

முயக்கம் பயக்கும் ஊடலும் முறையே - முதலில் ஊடலில் தொடங்கினாலும் அது முயக்கதிற்கு வழிவகுக்கும் என்பதால் காதலர்களின் ஊடு அதுவும் முறையே ஆம் 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கார்சூழ் வானம் நேரிசை ஆசிரியப்பா

  கார்சூழ் வானங் கடுங்கோ டைக்கண்  ஆர்த்தெழு மிடியுட னச்சத் தூட்டினு மழைபெய் தாட்கொளும் வகையாய்  முயக்கம் பயக்கு மூடலு முறையே