வியாழன், 11 ஜூன், 2026

முடிவிலாத ஒரு எழு சீர் மண்டிலம்

முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ  

படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ

விடிவி லாதொவொரு வினையி னான்மலரும் விதியி னாட்படுதன் மாறுமோ  

வடிவி னாணிறையு நிகரின் மார்பழக னடிக ளேசரணம் வாழ்விலே   

முடிவிலாத ஒரு இடரின் ஆட்படு - முடிவு இல்லாத ஒரு இடரின் நாம் ஆட்படும்போது 

நம் முனைவினால் வருதல் தீர்வதோ - நாம் சொந்த முயற்சியை வைத்துக் காண்பது சரியான தீர்வாகுமா?

படியில் ஆழ்ந்து உழலு பலரின் - இப்புவியில் வாழ்வில் ஆழ்ந்து நம்மைப் போன்றே உழல்கின்ற பலரின் 

கால் வருடு பழினால் வருதல் தீர்வதோ - கால்பிடித்து அதனால் உண்டாகும் பழிச் சொல்லையும் ஏற்றலால் தான் தீர்வு வருமா?

விடிவு இலாத ஒரு வினையினால் மலரும் - முன் செய்த வினையின் தொடர் பயனாக, அதற்கு ஒரு விடிவே இல்லாத வாறு அமைந்த வினையினூடு மலரும் 

விதியின் ஆட்படுதல் மாறுமோ - விதியினால் நாம் ஆட்படுவது என்பது மாறத்தக்கதோ? (மாறாது என்பதாம்)

வடிவினாள் நிறையும் நிகரில் மார்பு அழகன் - அழகில் சிறந்தவளான திருமகள் நிறைந்து இருக்கும் , நிகர் இல்லாத அழகை உடைய மார்பனான திருமாலின்

அடிகளே சரண் நம் வாழ்விலே - திருவடிகளே புகல் நமக்கு வாழ்விலே 

ஒரு தீராத இடரில் நாம் ஆட்படும்போது, நமது முனைவால் வருவதும் தீர்வல்ல, பிற மானுடர்களின் அடிவருடி அதனால் வரும் பழியையும் ஏற்பதும் தீர்வல்ல, நம் முன் வினைப்பயனால் மலர்ந்த மாற்ற முடியாத விதியினால் வரும் துன்பத்தை நாம் சந்தித்தே தான் தீரவேண்டும், அது மாறாது என்றாலும், நமக்குள்ள ஒரே தீர்வு என்பது அழகிற் சிறந்த திருமகள் நிறைந்துறையும் நிகரில்லாத அழகு உடைய மார்பனான திருமாலின் திருவடிகளில் சரண் புகுவதே!

mudivilaadha voru vidarinaatpadunam munaivinaal varudha RiirvadhO

padiyilaazhndhuzalu palarin kaalvarudu pazhinaal varudha RiirvadhO

vidivlaadhavoru vinaiyinaanmalarum vidhiyin aatpadudhan maaRumO 

vadivinaa NiRaiyu nigarinmaarbazhaga nadigaLE saraNam vaazhvilE 


When we are encountering problems that seem to have no solution in life, do we get a proper solution by our self effort? Or do we resort to falling at the feet of other humans in the hope of getting a solution but instead ending up getting into more ignomini? This seemingly solution less problem is brought to us by our own past deeds(karma) and takes the shape of destiny which is not possible to change. Yet the only solution to all this and more is to surrender at the feet of the Lord who has an incomparably handsome chest, where the lexicon of beauty Mahalakshmi always lives!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முடிவிலாத ஒரு எழு சீர் மண்டிலம்

முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ   படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...