வியாழன், 25 ஜூன், 2026

திருமண வாழ்த்துப் பாடல்


அறம்சார்ந்த இல்வாழ்வில் அணிசேர விழைவோராய்

அகம்சார்ந்த உச்சம்பல அடைவோராய்

 

நிறமாறாப் பண்புபற்றி நல்லவையோ அல்லவையோ

நிலைமாறா துடனெதிர்கொள்  நல்லோராய்

 

துறைசார்ந்த உயர்வெட்டித் திருவிலகா அருள்வளரத்

துணிவுடனே வருங்காலம் தழைப்போராய்

 

முறைசேர்ந்த தம்பதிகள் மூவுலகும் புகழ்பாட

மொழிசேர்ந்த பொருள்போல வாழியவே

சனி, 20 ஜூன், 2026

விழிதரும் அறு சீர் மண்டிலம்


விழிதருங்  காத லின்ப மிடிமுன்வரு மின்ன லென்ன 

மொழிதருங் காத லின்பு சுவைமுன்வரும் வாச மென்ன 

கெழுதருங் காத லின்பு கிணற்றூறுநந் நீரின் வண்ண 

முழுதருங் காத லன்பை யுணராதவர் மூட ரன்றே

வெள்ளி, 19 ஜூன், 2026

மதுவிரிந்து அறு சீர் மண்டிலம்

விளம் தேம தேமா 

புளிமா புளிமா புளிமா 

மதுவிரிந் தாடு பூவின் 

     மணமோ சுவையோ மயக்கும் 

மதிமறந் தாடு வண்டு 

      மயலின் முழுது மிழக்கும்

விதிவிரிந் தாடு போது 

     விழைவே விழியீ ரடைக்குங்

கதிபயந் தாள்வ னாளப் 

      பயன்மீ துகப்புக் கனவே

வியாழன், 18 ஜூன், 2026

தூயவள் (கோடை மழை) அறு சீர் மண்டிலம்

விளம் கருவிளம் கருவிளங்காய்

விளம் கருவிளம் கருவிளங்காய்  

தூயவ டிருவள ருரவழகன் 

     முகமென முகில்வரு திருவழகை 

நேயமொ டுயிரிகள் பெருமகிழ்வாய்க் 

      கானமொ டழைவிட நிலமகளின்

றாயுள மளிதர வடர்கடலைச் 

     சூலுறு தகைமையி னமைத்ததனாற்

றீயென வெரிகிற கதிரவனின் 

      சேயென வருகிற திருமைழையே

தனத்தின் ஓட்டம் கலிமண்டிலம்

தனத்தினோட்ட நீங்கிடாத் தகுந்தவீகை செய்யவை 

சினத்தினோட்ட மேலழா துளத்தழுக்கைத் தீர்த்திடு

வனப்பினோட்ட மாய்ந்திடா தகத்தினூற்று வாகுசெய் 

மனத்தினோட்ட மாயவை மகேசன்சேய் குகேசனே 

புதன், 17 ஜூன், 2026

தொடர்கதை அறு சீர் மண்டிலம்

விளம் கருவிளம் கருவிளங்காய்

     விளம் கருவிளம் கருவிளங்காய்   

தொடர்கதை யெனவரு மிடர்கெடவுந் 

       துணிவுள முறுநிலை நிலைபெறவுஞ்

சுடரொளி யெனவழி தெளிவுறவுந் 

       துகளறு மதிவள ரளிபெறவும் 

அடர்விட மிடறிடை நிலைபெறவன் 

       றவுணரு மமரருங் கடல்கடைநாள் 

படருல குயிர்பெற வளிதருவான் 

    பதவிணை தொழுதெழு வினிமனனே 

செவ்வாய், 16 ஜூன், 2026

குலம் அதின் உயர்வு இல்லை அறு சீர் மண்டிலம்

விளம் கருவிளம் கருவிளங்காய் 

விளம் கருவிளம் கருவிளங்காய் 

குலமதி னுயர்விலை மதியதிலை 

       கொடுமுய றவமிலை பணிவதிலை

நிலமக ளளிதரும் பொறுமையிலை 

     நினைவினி னிலைபெறு மகமதிலை

இலையென வருபவர் மனமகிழ 

    இலைமுழு வுணவது தருவதிலை
 
மலையென மறுவுளன் கதிபெறவே 

    வரையறை மறந்தரு ளறுமுகனே

திங்கள், 15 ஜூன், 2026

மறையும் வான்கதிரின் எழு சீர் மண்டிலம்

மா கூவிளங்காய் மா கூவிளங்காய் 

மா கூவிளங்காய் கூவிளம் 

மறையும் வான்கதிரின் வண்ணந் தூரிகையின் 
       சிதறு மஞ்சணிற மல்லவே
குறையும் வானொளியி லடையும் புள்வகையி
       னரவங் கேளுசெவி கொஞ்சுமே
நிறையும் வானிருளி னுடுவும் பானிலவு மொளிர 
       நேர்த்தியுறு மோவியம்
உறையு மோரமைதி யுயிர்க ளாளுவகை 
        யுதய மாகும்வரை மிஞ்சுமே

சனி, 13 ஜூன், 2026

அன்பில் ஆழ்ந்த எழு சீர் மண்டிலம்

 அன்பி லாழ்ந்தமன மழகி லாட்படுமென் றவல மெண்ணுவது மேனடா 

என்பி லாதவுட லெங்கு மில்லையெனு முண்மை காணவரு மோவினா 

இன்பி னால்வருதன் மெய்யி னின்பமிலை யன்பி னோர்கிளைய தாகுமே

துன்ப மேவரினு மெந்த மாற்றமிலை யன்ப ணைத்ததனை யாளுமே 


மா கூவிள்ங்காய் மா கூவிள்ங்காய் 

மா கூவிள்ங்காய் கூவிளம்

வியாழன், 11 ஜூன், 2026

முடிவிலாத ஒரு எழு சீர் மண்டிலம்

முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ  

படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ

விடிவி லாதொவொரு வினையி னான்மலரும் விதியி னாட்படுதன் மாறுமோ  

வடிவி னாணிறையு நிகரின் மார்பழக னடிக ளேசரணம் வாழ்விலே   

புதன், 10 ஜூன், 2026

தலை விரித்த எழு சீர் மண்டிலம்

தலைவி ரித்த கோல மேள தாள வார்ப்ப ரிப்புடன்

நிலைவ ருத்து முண்மை சொல்லு நீளு டல்வி திர்க்கவே 

மலைத கர்த்த வேல னென்ன தீத கற்ற வாழ்வினில் 

தலைவி மீதி றங்கி நின்ற சத்தி சித்த சுத்தியே 

திங்கள், 8 ஜூன், 2026

ஏற்ற கொள்கை எழு சீர் சந்த விருத்தம்

ஏற்ற கொள்கை யொன்றி னிற்ற லேற்ற மன்று வாழ்வினின்
மாற்ற நேரம் வந்த போது கொள்கை மாற்ற லாகுமோ
தோற்று வாழ்வி னேற்ற கொள்கை வெல்ல றூற்ற லாகுமென்
றூற்றை யன்ன புத்து தித்து மாற்ற லேற்ற லேற்றமே 

வீற்றிருந்த எழு சீர் சந்த விருத்தம்

வீற்றி ருந்த வீடு மக்கள் 

       சுற்ற மன்பர் மீதமில்

போற்றி நின்ற நண்பர் நாடு 

     போர்தொ டுத்த மாற்றலர்

சீற்ற முற்ற கண்ண னென்று 

      தீர்ந்து போனர் யாவரும் 

 
கூற்றி னின்று தப்பி நிற்ற 

     லேற்ற மன்று சாபமே

அறத்தின் மறு உரு எழு சீர் மண்டிலம்

 அறத்தின் மறுவுரு சினந்து கொழுந்தெழ 

           வழற்க ணாலவா யழுந்தாதோ

புறத்தின் றீயெனக் கற்பின் குலமகள் 

      புயல்போ லொருநொடி யெரித்தாள
 
நெறிக்கண் வழுவிய வேந்த னுயிர்விட 

       நெருப்புச் சூழ்ந்தெழ நகரெங்கும்
 
உறக்கந் துறந்தன ருயிர்கள் யாவையும் 

       ஒருத்தி தமிழ்புக ழழியாதே 

சனி, 6 ஜூன், 2026

ஆனை முகத்தவன் எழு சீர் மண்டிலம்

 ஆனை முகத்தவ னௌவைக் களித்தவ 

         னாழி கவ்வியன் றூர்காணச்

சேனை முதல்வனை விகடக் கூத்திடச் 

      சிரித்துப் பிள்ளைபோல் விளையாடி
 
வானோர் முதல்வனி னாழி மீடர 

      மலையா மிடர்களை மடுபோல

தானே களைவனென் றார்க்கு முணர்த்திடச் 

        சாற்று முதலென நின்றானே 

குட்டுத் தலைப்பட எழு சீர் மண்டிலம்

 குட்டுத் தலைப்படக் கும்பிட் டனுதினங் 

        கும்பக் களிற்றினைப் பணிவார்கள்

எட்டுத் திசையிலு மெட்டிப் புகழ்பெற 

      வின்பத் திளைப்பினிற் றிகழ்வார்கள்

துட்டப் பகைவர்க டுன்பம் பொடிபடத் 
 
      தொய்வி னிறைநிலை யடைவார்கள்

நிட்டைத் தடையற நேர்மை நிலையுற 

         நேரி னற்கதி சேர்வாரே

வெள்ளி, 5 ஜூன், 2026

புலர்வான் சிவக்க எழுசீர் மண்டிலம்

 புலர்வான் சிவக்கப் பரியேழைப் பூட்டிப் 

          புதிதாக நாளும் வருவான்

மலர்வான் மலர்க ளெழுவா னுயிர்கள் 

         வலமாக நாளும் வருவான்
 
பலர்வாழ வுண்டி பலவா யளிக்கப் 

         பழுதின்றி நாளும் வருவான்
 
விலகாத ஞான வொளியாய் விழிக்கும்  

          விழிகாணுந் தேவ னிவனே

எழுதாமரைக்கும் எழுசீர் மண்டிலம்

 எழுதா மரைக்கும் பலவா முயிர்க்கு 

         மிணையற்ற வாற்றல் வழங்கும்

எழுதா மறைக்குட் பொருளாய் விளங்கு 

        மிணையற்ற வாற்றற் றலைவன்
 
பொழிவான் மழைக்கு மருளாய் விளங்கும் 

         புலர்வான் வெளுக்கு மொருவன்
 
விழியான் முறைகண் டழைவார் மனத்தி 
 
        லறிவா யுதிக்கு மிளிர்வே 

வியாழன், 4 ஜூன், 2026

தோட்டை எழுசீர் மண்டிலம்

 தோட்டை வானில வாக்கி யன்பரின் 

       சொல்லை யுண்மைசெ யன்பினண்

மீட்டு வீணைய ணாணு சொல்லினள் 

        வேண்டு வார்துயர் தீர்ப்பவள்
 
காட்டி னட்டமா டீசர் பங்கினள் 
  
        காமன் மீளெழச் செய்தவள்

வாட்டு மாவினை மாய்க்கு மன்பினள் 

        மன்னு யிர்க்கெலா மன்னையே 

மூலமானவள் எழு சீர் மண்டிலம்

 மூல மானவள் மூவர் தாயவள் 

        மூன்று பாருமாள் சுந்தரி

கால மாள்பவள் காத லாள்பவள் 

        காவ லாண்மலை மாமகள்
 
கோல மானவள் கோவை யாள்பவள் 

        குன்ற மாள்குகன் றாயவள்
 
சூல மாள்பவள் சொன்ன மேனிய 

       டுன்ப மாய்க்குநம் மன்னையே

புதன், 3 ஜூன், 2026

நூறு முகங்களும் எழு சீர் மண்டிலம்

 நூறு முகங்களு நொறுங்கிடப் போரினி

னுழைபுலச் சாரதி மருகனுடை

யாறு முகங்களு மருள்வடி வானவை

யாறிரு திண்புயம் பகையொழிக்கு
மேறு மயிலழி மாயையின் பிடிதனை

யெண்ணிலி யறிவளி யயிறுணையெங்
கூறு மொழியினைக் குக்குடஞ் சீர்செயுங்

கோதிலி திருவடி கதிதருமே

அகந்தை என்னும் எழு சீர் மண்டிலம்

 அகந்தையென்னுஞ் சேற்றை யறக்களைவா னாளு 

          மருமறைகள் போற்று மிறைவன்

சுகந்துறந்து நாளுஞ் சினமொழித்த முனிவர் 

         சுகந்தனையே யெண்வார் நெஞ்சி

லகந்திகழு மாலை வனுபவிக்க நாமு 

         மருந்தவத்தா ரில்லை யெனினு

முகுந்தனதே யாவு மெனவுணர்ந்து கொண்டான் 

          மூவுலகுந் தருவான் காணே

திருவினைகள் நீங்கி எழு சீர் மண்டிலம்

 திருவினைக ணீங்கி யொருவழியாய் வாழ்விற் 

         றெளிவுறவே பாதை காண

வருமுயல்வை நாடி யனைத்துலகந் தேடி 

         யாவதொன்று மில்லை காணீர்

திருவுடைய மார்பன் றிகழொளிசே ராழிச் 

         செருத்தொடங்கு சங்கத் தலைவன்

றிருவடியைச் சேருந் திருநமக்குக் கிட்டத் 

        திருவுளமுங் கொள்வா னவனே

செவ்வாய், 2 ஜூன், 2026

அகந்தை அழிவுற எழுசீர் மண்டிலம்

 அகந்தை யழிவுற வகமலர்ந் தடிதொழ 

           வறிவளித் தருடர லுன்கடனே 

தகுந்த தடைந்திடத் தழைத்திட நற்குலந் 

           தாழ்விலி புகழ்தரு மொழிவளர 

வுகந்து துதிசெய வுரநிறை யுடலுற 

         வுனதிரு தாட்சரண் குறமுகண்மேன்

மிகுந்த வன்புடை விண்ணவர் காவல 

       வினையழி வேலுடைப் பெருமாளே 

இறையுள் உறைவது உலகா அறுசீர் மண்டிலம்

 இறையு ளுறைவ துலகோ வன்றி 

          யுலகு ளுறைவ திறையோ

நிறையு ளங்கங் குறையோ வன்றி 

        குறையி னிரையே நிறையோ

செறிவின் விரியே விரவோ வன்றி 

        விரிவே செறிவின் வித்தோ

முறையே மொழிவாய் முருகா 
 
     வென்று மூவா மொழியி னிறையே

மா மா மா மா 
    மா மா மா 

அறிவால் அறிவார்க்கு அறியன் எழுசீர் மண்டிலம்

 அறிவா லறிவார்க் கரிய னானா 

        லன்பா லடைவார்க் கெளியன்

பொறிவாய் விழுவார்க் கரிய னானால் 
     
         புகழ்பா டடியார்க் கெளியன்

நெறிவாய் நிற்போர்க் காசான் வாழ்வி 
   
        னிறைவாய்க் காண்போர்க் கிறைவன்

பிறைவா னிலவைச் சூடும் பரமன் 

           பிரியா னெங்க ணெஞ்சே

மா மா மா மா 
     மா மா மா   

சோழ வெண்பா

 ஏழைக்கு மீயு மெளிதிற் சதுரங்க 

வாழிக்கண் டேற்ற மறிஞராற்- சோழற்

களவிலா தள்ளித் தருமன் பியல்பே 

யொளிகதி ரோங்கு மரபு 

நாகணை நாதன் முற்றுமோனை அறுசீர் விருத்தம்

நாகணை நாதன் ஞான்று       நல்லற ஞால நாட்டத் தாக(ம்)தீர் தண்ணீர் தந்து      தாரணி தழைக்கச் சார்வா மேக(ம்)தோய் விண்ணின் வீழ்ந்து      மெய்த்தவர...