தலைவி ரித்த கோல மேள தாள வார்ப்ப ரிப்புடன்
நிலைவ ருத்து முண்மை சொல்லு நீளு டல்வி திர்க்கவே
மலைத கர்த்த வேல னென்ன தீத கற்ற வாழ்வினில்
தலைவி மீதி றங்கி நின்ற சத்தி சித்த சுத்தியே
தலை விரித்த கோலம் - தலைவிரி கோலத்துடன்
மேள தாள ஆர்ப்பரிப்புடன்- மேள தாளங்கள் ஆர்ப்பரிக்க
நிலை வருத்தும் உண்மை- சாமி இறங்கியதால் அங்கிருப்பவர்களின் நிலையை வருந்தச் செய்யும் தன்மை கொண்ட உண்மையையும்
சொல்லு நீள் உடல் விதிர்க்கவே - சொல்லக் கூடிய நீண்ட உடல் கொண்டவள் நடுங்கும்படியாக
மலை தகர்த்த வேலன் என்ன - மலையைப் பொடி செய்த வேலைக் கொண்ட முருகப் பெருமானைப் போன்று
வாழ்வினில் தீது அகற்ற- தீயவைகளை வாழ்வினின்று அகற்ற
தலைவி மீது இறங்கி நின்ற சத்தி - எமது தலைவியின் மீது இறங்கி உள்ள சத்தியானது
சித்த சுத்தியே- சித்தத்தைச் சுத்தம் செய்யும் (அவளுக்கும் பிறருக்கும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக