வெள்ளி, 19 ஜூன், 2026

மதுவிரிந்து அறு சீர் மண்டிலம்

விளம் தேம தேமா 

புளிமா புளிமா புளிமா 

மதுவிரிந் தாடு பூவின் 

     மணமோ சுவையோ மயக்கும் 

மதிமறந் தாடு வண்டு 

      மயலின் முழுது மிழக்கும்

விதிவிரிந் தாடு போது 

     விழைவே விழியீ ரடைக்குங்

கதிபயந் தாள்வ னாளப் 

      பயன்மீ துகப்புக் கனவே

மது விரிந்து ஆடு பூவின் - தேனானது மிக்கச் சுரக்க அசையும் பூவின்

மணமோ சுவையோ மயக்கும் - மணமோ அல்லது அதன் சுவையோ மயக்கும்?

மதி மறந்து ஆடு வண்டு - இதனால் ஈர்க்கப் பட்டுத் தன்னிலை மறந்த வண்டு அந்த மயலில் தன்னை முழுவுதுமாக ஈடுபட்டு இழந்துவிடும்

விதி விரிந்து ஆடு போது - மாற்றுதர்க்கரிய விதியானது தன் பிடியில் சிக்கிக் கொண்ட உயிர்களை ஆட்டிப் படைக்கும், அது அவ்வுயிர்களின் கண்கள் இரண்டையும் ஆசைகளால் மறைத்துவிடும்

கதி பயந்து ஆள்வன் ஆள - கதியைத் தரக் கூடிய இறைவன் அவ்வியிர்களை ஆண்டு அருளும் போது அருள்வான், அது நிச்சியமாக அவ்வுயிர்களின் கையில் இல்லை, அது இறைவனின் கருணையே! ஆகையினால் 

பயன் மீது உகப்பு கனவே- அதனால் ஒரு பயன் கருதி நாம் முயல்வது என்பது வேடிக்கை மற்றும் அது வெறும் கனவுக்கு ஒப்பவாம் அறிவீர்!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மார்பிருந்து எழு சீர் மண்டிலம் (சந்தம்)

  மார்பி ருந்து மன்ன னுக்கு மங்க லங்க ளீபவள்  சார்பி ருந்து சீவ னுக்கு வீடு பேறு தருபவள்  போர்பு ரிந்து வெல்வ ளல்லள் புன்சி ரித்து வெல்பவ ணீ...