மன்றாடி மைந்தனை மாமயில் வாகனனைக்
குன்றாடு கொற்றனைக் கோட்டுருவு வேலனைச்
சென்றோடிச் சேவித்துஞ் சிந்தித்து முய்வனோ
வென்றாடி வெள்ளாமுன் யான்
என் தாடி வெள் ஆ முன் யான் - எனது தாடி நரைக்கும் முன் (முதுமைப் பருவம் எட்டும் முன்) நான்
மன்றாடி மைந்தனை- தில்லையில் நடனமாடும் சிவபிரான் தன் மைந்தனை
மா மயில் வாகனனை- பெருமை பொருந்திய மயில் வாகனத்தைக் கொண்டோனை
குன்றாடு கொற்றனை- குன்றுகள் தொறும் குடியிருக்கும் கொற்றம் உடையவனை
கோட்டு உருவு வேலனை- கிரௌஞ்ச மலையைத் துளைத்த வேலாயுத்தை உடையோனை
சென்றோடி சேவித்தும் சிந்தித்தும் உய்வனோ - பல திருத்தலங்கட்குச் சென்று தொழுதும் மனதாரச் சிந்தித்தும் உய்வை அடைவேனோ ?
Before my beard turns grey (I attain old age) will I visit the holy shrines and pray and keep thinking about the son of Lord Shiva who dances in Chidambaram, the one who has the esteemed peacock as his mount, the one who rules over and plays on all hills, the one who wields the vEl which pierced through and destroyed the Krouncha hill.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக