வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

வில்லொன்று கொண்டான் வெண்பா

வில்லொன்று கொண்டான் வியனுலகின் மாந்தனாய்ச்

சொல்லொன்று கொண்டான் றுயரழிக்குந் தூயவளை

யில்லென்று கொண்டா னிலக்கடையு மம்பிளையா 

கொல்லாமற் கொல்லுமிக் கண் 

கொல்லாமல் கொல்லும் இ கண் - பெரிய முனைப்பில்லாமல் போகிற போக்கில் கொல்லும் எமது தலைவியின் இக் கண்களானவை 


வில் ஒன்று கொண்டான் - சார்ங்கம் என்னும் ஒப்பற்ற வில்லை உடையவன்

வியனுலகின் மாந்தனாய் சொல் ஒன்று கொண்டான் - வியப்பு மிக்க இவ்வுலகில் மாந்தனாகத் தோன்றித் தன் சொல்லை என்றென்றும் காப்பாற்றும் பண்பைக் கொண்டவன் 

துயரழிக்கும் தூயவளை இல்லென்று கொண்டான்- அனைத்துத் துயரங்களையும் அழிக்கும் தூயவளான திருமகளின் வடிவான சீதையைத் தனது மனைவியாகக் கொண்டவன்றன் 

இலக்கு அடையும் அம்பு இளையா - இலக்கை தவறாது அடையும் அம்பிற்கு இளைய உடன்பிறப்பா?


தலைவன் தலைவியின் விழியை வியந்துரைக்கிறான்:- 

சார்ங்கம் என்னும் ஒப்பற்ற வில்லைக் கொண்ட, வியனுலகின் மாந்தனாய் அவதரித்துத் தன் சொல்லை என்றும் காப்பாற்றிய, துயரழிக்கும் தூயவளான திருமகளின் வடிவான சீதையைத் தன் இல்லாளாகக் கொண்ட இராமபிரானின் என்றும் தவறாது இலக்கடையும் அம்பிற்கு இளைய பிறப்புப் போன்றோ எமது தலைவியின் கொல்லாமல் கொல்லும் விழி என்று வியக்கிறான் தலைவன். இராமபிரானின் அம்பு எவ்வாறு எதிரிகளை அழிக்கும் செயலை எளிதில் செய்து முடிக்குமோ அவ்வாறே மிக எளிதில் கொல்லாமல் கொல்லும் பண்புடையது தலைவயின் விழி என்பது கருத்து.


villondru koNdAn viyanulagin mAndhanAych

chollondru koNdAn Ruyarazhikkundh dhUyavaLai

yillendru koNdAn ilakkadaiyum ambilaiyA 

kollAmaR kollum ik kaN 


Are (my beloved's) these eyes the younger siblings of the arrows which never miss their target of the one who wields the unmatched bow called Saarnga, who took birth in this wonder filled world as a man and kept his word under all circumstances, who took as his wife Sita who was verily Mahalakshmi, the pure one who destroys all evils? 

Sri Rama's arrows never miss their target and they nonchalantly kill the enemies without being the least effortful,similarly a man wonders if his beloved eyes too are siblings to these arrows because they have the ability to effortlessly kill the onlooker!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சூதில் தோற்ற அறு சீர் மண்டிலம்

  சூதிற் றோற்றநல் லைவரின்         சோர்வ கற்றிய வார்சகன்  தூதிற்  சென்றனன் மீள்கொளத்        தோற்ற விடங்களை யாயினும் வாதிற் றீயவர் மாய்வுற    ...