வியாழன், 6 ஆகஸ்ட், 2026

இரைதேடி எண்சீர் மண்டிலம்

 இரைதேடிச் சென்றுவந்தேன் பசியை யாற்ற 

      வெனதுயிரைக் காணவில்லை யென்செய் வேனோ

குரைநீளு கூர்மைமிக்க வெயிற்று நாய்கள் 
    
     குறைவில்லை சுற்றமெங்கும் பதைத்தேன் யானே

யுரைதேடு மூமைபோன்று றைந்து போனே 
    
    னுயிர்மாண்ட வுடலம்போன் றியக்கம் விட்டேன்

கரைதேடு கப்பலென்னைக் காக்குஞ் சோதி 
      
     கடவுளருள் காவாக்கால் வாழேன் காணே

தாய் பூனை தனது குட்டியைக் காணாமல் தவித்த நிலையில் பாடியது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எண்ணக் கடலில் அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

  எண்ணக் கடலி லாழ்ந்தவெனை யீச னினைவி லாழ்ந்திடவை மண்ணைக் கவ்வும் பிறவிதனை வாழும் பொழுதே மாற்றியமை விண்ணு நிலனு மாள்பவனே ...