வியாழன், 12 பிப்ரவரி, 2026

வினைப்பயன் வெண்பா

 வினைப்பயன் மாற்ற விழைவெனக் கில்லை

நினைத்ததி யாவு நிறைவேற வேண்டா

வுனைப்பய னென்றே யுணர்ச்சியை வெல்ல

முனைப்பினை யாண்முரு கா



வினைப்பயன் மாற்ற எனக்கு விழைவு இல்லை - கருமத்தினால் ஏற்படும் விளைவுகளை மாற்ற எனக்கு விருப்பமில்லை

நினைத்தது யாவும் நிறைவேற வேண்டா - யாம் நினைத்தெல்லாம் நடக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை

உனைப்பயன் என்றே உணர்ச்சியை வெல்ல - உன்னையே இறுதி இலக்காகக் கொண்டு எனது மானுட உணர்ச்சிகளின் நான் மேன்மை கொள்ள

முனைப்பினை ஆள் முருகா - எனது முனைப்பினையும் நீயே வந்து ஆள்வாய் முருகா 


வினைப்பயனை மாற்றும் விழைவெனக்கில்லை, நினைத்தது நடக்கவேண்டும் என்ற விருப்பமும் இல்லை, உன்னையே பயனாகக் கொள்ள நான இயல்பான மானுட உணர்ச்சிகளை வெல்ல எனது முனைப்பாகவும் நீயே நின்று ஆளுமை செலுத்த வேண்டும் முருகா, அடையும் பொருளும் அதனை அடையும் வழியாகவும் நீயே இருப்பாய் முருகனே என்பது கருத்து 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வினைப்பயன் வெண்பா

  வினைப்பயன் மாற்ற விழைவெனக் கில்லை நினைத்ததி யாவு நிறைவேற வேண்டா வுனைப்பய னென்றே யுணர்ச்சியை வெல்ல முனைப்பினை யாண்முரு கா