திங்கள், 23 பிப்ரவரி, 2026

கடலாழம் வெண்பா

கடலாழஞ் சென்று கடலாடைக் கன்னிக் 

கிடரேது மின்றி யெயிற்றா லெடுத்து

விடலாமோ வென்முன் விழிக ணடமாடி 

நாணுவதே காத னயம் 


கடலாழம் சென்று - கடலின் ஆழத்தில் மறைக்கப் பட்ட இடத்திற்குச் சென்று 

கடல் ஆடை கன்னிக்கு இடர் ஏதும் இன்றி - கடலைத் தன் ஆடையாகத் தரித்த கன்னிமகள் பூமிப் பிராட்டி, அவட்கு எந்த இடரும் வாராது 

எயிற்றால் எடுத்து - கேழலாக உருக்கொண்ட திருமால் தனது மருப்பால் எடுத்து 

விடலாமோ என் முன் - கீழ் இறக்கி விடலாமோ என்பதற்கு முன்பாக 

விழிகள் நடமாடி நாணுவதே - திருமாலின் விழிகளும் பூமிப் பிராட்டியின் கலந்து நடனம் புரிந்து பின்பு தலைவியான பிராட்டி நாணம் உறுவதே 


காதல் நயம் - காதலின் நயமாம் 


தலைவன் தலைவியை இடரிலிரிந்து மீட்கும் போது இயல்பாக அவர்கட்கு இடையில் காதல் மலர்கிறது என்பது கருத்து, இங்கு தலைவனாக வராக அவதாரம் கொண்ட திருமாலும்,   அசுரனால் ஒளித்து வைக்கப் பட்ட பூமிப் பிராட்டியும் தலைவியாகத் திகழ்கிறாள்  

kadalAzhan jendru kadalAdaik kannik

kidarEdhu minRi yeyitrA leduththu 

vidalAmO venmun vizhiga NadamAdi

naNuvadhE kAdha nayam 


Going into the depths of the cosmic ocean, MahaviShnu as Varaaha avataar taking the form of a pig lifted up Bhu Devi with his tusks and absolved her of all her problems, before he dropped her back safely their eyes met and Bhu Devi starts smiling coyly in the act of falling in love. Masculine showing valour in saving the Feminine from danger and this naturally leading to a feeling of love is indicated here showing the example of Gods.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விழிமறைக்கும் வெண்பா

 விழிமறைக்குங் கைகள் விழைவொடுக்க லாமோ வழைவனுப்புங் காந்த ளிதழ்கரக்க லாமோ மழைகொடுக்கும் வானத்தை வேண்டாச் செழிவடக்குஞ் செம்புலந் தேரினுமுண் டோ...