திங்கள், 23 பிப்ரவரி, 2026

தாய்தந்த வெண்பா

தாய்தந்த வேல்வாங்கித் தாரக சூரணிக்கு

மாய்தந்த வள்ளி மணாளன் முகமாறின்

சேய்தந்த செந்தமிழைச் சீர்பயில வாய்தந்த 

வாழ்வின்கண் வாரா தயர்வு 


தாய் தந்த வேல் வாங்கி- அன்னை பராசத்தி அளிக்கப் பெற்ற வேலை வாங்கி 

தாரக சூர் அணிக்கு மாய் தந்த - தாரகாசுரன், சூரன் , மற்றும் அவர்கள் அசுர அணிக்கு மாய்வைத் தந்தவனான 

வள்ளி மணாளன் - வள்ளியின் மணாளனான 

முகம் ஆறின் சேய் தந்த - ஆறு முகத்தைக் கொண்ட முருகப் பெருமான்  ஈந்த 

செந்தமிழைச் சீர்பயில - செந்தமிழ் என்னும் சிறப்புமிக்க மொழியைச் சீராகப்  பயில்கவதற்கு 

வாய்தந்த வாழ்வின்கண் அயர்வு வாராது- வாய்ப்பளித்த இவ்வாழ்வின் கண் அயர்வு என்பது என்றும் வாராது 


The Lord who is always young with six faces, husband of vaLLi devi who got the vEl given by his mom ParaShakthi and destroyed Tarakasura, Suran and all of Asura's army gifted the language of chenthamizh to this world. And this life has given us an opportunity to learn this language well, what a great blessing this, so there would never be regret or bad feeling about this life for us!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விழிமறைக்கும் வெண்பா

 விழிமறைக்குங் கைகள் விழைவொடுக்க லாமோ வழைவனுப்புங் காந்த ளிதழ்கரக்க லாமோ மழைகொடுக்கும் வானத்தை வேண்டாச் செழிவடக்குஞ் செம்புலந் தேரினுமுண் டோ...