திங்கள், 23 பிப்ரவரி, 2026

விழிமறைக்கும் வெண்பா

 விழிமறைக்குங் கைகள் விழைவொடுக்க லாமோ

வழைவனுப்புங் காந்த ளிதழ்கரக்க லாமோ

மழைகொடுக்கும் வானத்தை வேண்டாச் செழிவடக்குஞ்

செம்புலந் தேரினுமுண் டோ 

விழிமறைக்கும் கைகள் விழைவு ஒடுக்கலாமோ - விழியை மறைக்கும் தலைவியின் கைகள் இருவருக்கும் எழும் விழைவை ஒடுக்கல் என்பது சரியோ?




அழைவு அனுப்பும் காந்தள் இதழ் கரக்கலாமோ - அவ்வாறே அழைவு அனுப்புக் கூடிய செவ்விதழ்களைக் கரத்தல் தகுமோ 


மழை கொடுக்கும் வானத்தை வேண்டா - மழையை அள்ளித் தரும் வானத்தை வேண்டாம் எனக் கூறும் 


செழிவு அடக்கு செம்புலம் தேரினும் உண்டோ - செழிவைத் தன் அகத்தே வைத்துள்ள செம் மண்ணானது ஆராய்ந்தாலும் கிடைக்குமோ?


தலைவியுடன் இருக்கும் வேளையில் தலைவி நாணத்தினால் விழியைத் தன் கைகளால் மறைக்கிறாள், அவ்வாறே தனது செவ்விதழ்களையும் கரக்கிறாள். அதைக் கண்ட தலைவன் இது தகுமா இதனால் தமக்குள் எழும் விழைவை அடக்கலாகுமா என்றுரைக்க வானம் மழை தரும்போது மண் அதை வேண்டாம் என்று சொல்லும் படி ஆராய்ந்தாலும் காண முடியுமா என்று எடுத்துச் சொல்கிறான் 

vizhimaRaikkung kaigaL vizhaivodukka lAmO 

vazhaivanuppung kAndha Lidhazhkarakka lAmO

mazhaikodukkum vAnaththai vENdAch chezhivadakku

chempulan dhErinumuN dO 


The scene is between an intense playful bout of love between two people, where the lady closes her eyes and partly her lips. So the man says, can the hands closing the eyes hide the developing desire, and the inviting reddy lips, should it be hidden too? Will any fertile ground say no the rains that the skies are sending forth with love? The answer is a resounding no, and so should be restraint in the play of lovers!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விழிமறைக்கும் வெண்பா

 விழிமறைக்குங் கைகள் விழைவொடுக்க லாமோ வழைவனுப்புங் காந்த ளிதழ்கரக்க லாமோ மழைகொடுக்கும் வானத்தை வேண்டாச் செழிவடக்குஞ் செம்புலந் தேரினுமுண் டோ...