பூச்சுடி யையளித்தாள் பொய்யண்டா மெய்யழகி
னாச்சியா ணல்ல தமிழ்ப்பாவை - யாய்ச்சியா
யான்றுரைத்தா ளாண்டா ளெமை
பூச்சுடி ஐ அளித்தாள் - பூமாலை தான் முதலில் சூடி பின்பு தனது தலைவனான திருமாலுக்கு அளித்தவள்
பொய் அண்டா மெய் அழகின் நாச்சியாள் - பொய் என்பது சற்றும் அண்டாத படி , உண்மையே உருவான உடலழகைக் கொண்ட நாச்சியாள்
நல்ல தமிழ்ப்பாவை - பெருமைக்குரிய திருப்பாவையை
ஆய்ச்சியாய் ஆன்று உரைத்தாள் - ஆய்ச்சியாய் தன்னைக் கருதிக் கொண்டு இவ்வுலகே உய்யும் பொருட்டு நிறைவாய் இறையனுபவத்தை உரைத்தவளான ஆண்டாள்
எமை ஆண்டாள் - எம்மை ஆண்டு தனது அடிமையாகச் செய்தனள்
pUchchUdi yaiyaLiththAL poyyaNdA meyyazhagin
nAchchiyA Nalla thamizhppAvai yaaychchiyA
yAnRuraiththA LANdA Lemai
She who wore the flower garland herself before giving it to her Lord, who is of a beauty that outclassees all falsehood,the empress who gave the esteemed thiruppAvai invoking the bhava of Gopika, that ANdAL rules us!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக