வியாழன், 26 பிப்ரவரி, 2026

நாத்தழும்பு நேரிசை சிந்தியல் வெண்பா

 நாத்தழும் பேற நவில்வே னுனநாமஞ் 

சேர்த்தாள் சிறியனையுஞ் சீர்பாதங் - கார்த்திகைக் 

கன்னிவளர் கந்தா கனிந்து  



கார்த்திகை கன்னி வளர் கந்தா - கார்த்திகை கன்னிகளால் வளர்க்கப் பெற்ற கந்தனே 

சிறியனையும் சீர் பாதம் சேர்த்து ஆள் கனிந்து - சிறியனாகிய என்னையும் கனிந்து உனது சீர்பாதத்தில் சேர்த்து ஆள்வாயாக 

நாத்தழும்பேற நவில்வேன் உன நாமம் - இடைவிடாது உனது நாமத்தையே சொல்லிக் கொண்டு இருப்பேன்

சிறியனாகிய என்னையும் நீ உனது சீர்பாதத்தில் கனிந்து சேர்த்து ஆள வேண்டும்,கார்த்திகை கன்னிகளால் வளர்க்கப் பெற்ற கந்தப் பெருமானே, ஏனென்றால் நான் உனது நாமத்தை இனி இடைவிடாது நவிலப் போகிறேன்!


nAththazhum bERa navilvE nunanaaman

JErththAL chiRiyanaiyunj jErpAdhan - gArthigaik 

kannivaLar kandhA kanindhu 


Oh Lord Skanda, who was raised by the 6 Karthika maidens, tenderly accept even an insignificant like me and join me in your holy feet, as I will be reciting your names constantly by your grace!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வந்த வினையும் கட்டளைக் கலித்துறை

வந்த வினையும் வருகின் றவினையும் வீசியெறி  முந்து விரையு முகட்டைப் பிளக்கு முதுவுலகி  னுந்தி சுவற வுருமா வழிய வுமைபரிசாய்த் தந்த வயில்வேற் சர...