பால வடிவினன் பாங்க ளிளமகன்
கோல மயிலினன் கூர்வேலன் மூலன்
முருகன்சொன் மூவா மறை
பால வடிவினன் - என்றும் குமரனாக இருப்பவன்
பாங்கள் இள மகன் - அழகே உருவானவளான சத்தியின் இள மைந்தன்
கோல மயிலினன் - அழகு பொருந்திய மயிலை வாகனமாகக் கொண்டவன்
கூர் வேலன் - கூர்மையான வேற்படையை உடையவன்
மூலன் முருகன் - அனைத்துக்கும் மூலமானவன் முருகன்
சொல் மூவா மறை- அவனது சொல்லே முப்பில்லாத வேதங்களாம்
bAla vadivinan pAngka LiLamagan
kOla mayilinan kUrvElan mUlan
muruganchon mUvA maRai
He whow is always of the young form, younger son of beauty incarnate Shakti, one who has the beautiful peacock as his mount, the one who is source of all things that Lord Murugan's word is the eternal Vedas.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக