ஞாயிறு, 1 மார்ச், 2026

மயக்குயர் சிந்தியல் வெண்பா

 மயக்குயர் விக்கும் வனப்புணர் விக்குந்

தயக்ககற்றிச் சேர்க்குஞ் சனத்தை நயத்தலுக்கே

ஞாலநல்கு மாலைப் பொழுது

மயக்ககு உயர்விக்கும் - மயக்கத்தை மிகச் செய்வதுவும் 

வனப்பு உணர்விக்கும் - அழகை உணர்த்துவதுவும் 

தயக்கு அகற்றி சனத்தை சேர்க்கும் - தயக்கத்தை அகற்றி மக்களைச் சேர்ப்பதுவும் 

நயத்தலுக்கே ஞாலம் நல்கு மாலை பொழுது - நயந்து இருக்க வேண்டும் என்பதற்கே இப்பிரபஞ்சத்தால் அளிக்கப் பட்ட மாலைப் பொழுதாம் 


 mayakkuyar vikkum vanappuNar vikkum

thayakkagatrich chErkkunj janaththai  nayaththalukkE 

gnAlanalgu mAlaip pozhudhu 


It increases intoxication, it gives us a sense of beauty, it removes hesitations and joins people together, the time called evening that is created by the universe solely for the purpose of enjoyment!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாணா டோறும் கலித்துறை- காலை விளித்துப் பாடியது

வாணா டோறும் பல்லிடஞ் செல்ல வகைசெய்யுந்  தூணா நின்ற தன்னுடற் பாரச் சுமைதாங்கீ கோணஞ் செய்து குந்துதற் கேதாங் குணக்காலே  நாணா துன்னைப் போற்றுவ ...