ஞாயிறு, 1 மார்ச், 2026

மாலைப் பொழுது சிந்தியல் வெண்பா

தினத்திற் பணியாழச் சிந்தனை செல்லு

மனைத்து மடங்கு மிராவு வனப்புயர்

மாலையே வையத் துகப்பு



தினத்தில் பணி ஆழ செல்லும் சிந்தனை - தினப்பொழுதில் பணியின் கண் ஆழச் செல்லும் சிந்தனையானது 

 இராவு அனைத்தும் அடங்கும் - இரவின் பொழுது அனைத்தும் அடங்கிடும் 

வனப்பு உயர் மாலையே - அழகு மிகுந்த மாலைப் பொழுதே 

வயத்து உகப்பு - உலகிற்கு உகப்பைத் தரும் பொழுது என்பதாம் 


dhinaththiR paNiyAzhach chindhanai chellum 

anaiththum adangum irAvu vavappuyar 

mAlaiyE vaiyath thugappu 


During the day our mind is absorbed in the needs of work, night is a period where everything subsides, the beautiful period of evening is the excitement of this world.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முடிவிலாத ஒரு எழு சீர் மண்டிலம்

முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ   படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...