உறக்கத்து முன்பே ருரைக்கின்றாள் பேதை
மறக்க வழியின்றி மாலி - லுறங்குதியோ
பாலாழி பாம்பணையு மாலேயுன் பித்தையிவ
ணூலாக நொந்துழலல் கண்டு
தாய் தன் மகள் காதல் வயப்பட்ட துன்பத்தில் பாடியது :-
மாலில் மறக்க வழியின்றி - மாலுற்று மறப்பதற்கு வழியொன்றும் இல்லாது
உறக்கத்தும் உன் பேர் உரைக்கின்றாள் பேதை - உறங்கும் போதும் உனது பெயரையே சொல்லி அரற்றுகின்றாள் இப்பெண்
உன் பித்தை இவள் நூலாக நொந்து உழலல் கண்டு - உன் மேல் பித்தாகத் திரியும் காதல் வயப்பட்ட இவள் நூலாக மெலிந்து நொந்து உழல்வதைக் கண்டும்
பால் ஆழி பாம்பு அணையும் மாலே உறங்குதியோ - பாற்கடலில் ஆதி சேடனாரனைப் படுக்கையாகக் கொண்ட திருமாலே நீ உறங்கிக் கொண்டு தான் உள்ளாயோ
uRakkaththum unpEr uraikkinRAL pEdhai
maRakka vazhiyinRi mAlil uRangdhiyO
pAlAzhi pAmbaNaiyu mAlEyun piththaiyiva
NUlAga nondhuzhalal kaNdu
Even in sleep this lass mutters your name unable to forget and completely immersed in the intoxication of love, despite seeing that she who is mad about you has become thin and is suffering being separated from her lover, would you still be sleeping happily in your serpent bed in the ocean of milk oh ThirumAl (Sriman Narayana)
This is from the viewpoint of a mother who finds her daughter suffering in love!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக