கனியுண்டு தந்தாள் கனிவான பத்திக்
கினிதுண் டிசைந்தா னிறைவன் - மனதண்டா
தாணவத்தை யாடவத்தி னாறகற்று தூயருக்கு
மாணளிக்க நாவிசைக்கும் வான்
கனி உண்டு தந்தாள் கனிவான பத்திக்கு - தான் உண்டு பின்பு இராமருக்குக் கனியைத் தந்த சவரியின் கனிவான பத்திக்கு
இனிது உண்டு இசைந்தான் இறைவன் - மனமகிழ உண்டு தன் இசைவைத் தெரிவித்தான் இறைவனான இராம பிரான்
மனது அண்டாது ஆணவத்தை - மனத்தின் கண் அண்டாதபடி ஆணவத்தை
ஆழ் தவத்தின் ஆறு அகற்று தூயருக்கு - ஆழமான தவத்தின் வாயிலாக அகற்றும் தூய உயிர்கட்கு
மாண் அளிக்க நாவு இசைக்கும் வான் - மாண்பை அளிக்க வானவர்களும் இசைத்து வரவேற்பார்கள்
kaniyuNdu thandhaaL kanivAna bakthik
kinidhuN disaindhA niRaivan manadhaNdA
dhANavaththai Adavaththin ARagatru thUyarukku
mANaLikka nAvisaikkum vAn
To the pure bhakti of Sabari who ate the fruits and offered to Lord Rama, God accepted it whole heartedly and was very happy with it. Similarly for those who cast aside ego with deep penance even the celestials will sing their praises and welcome them!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக